உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிச்சுட்டோம்; நல்ல செய்தி சொன்னது ரஷ்யா!

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிச்சுட்டோம்; நல்ல செய்தி சொன்னது ரஷ்யா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 'புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். 2025ம் ஆண்டின் துவக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும்' என ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.புற்று நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. சில தனியார் மருந்து நிறுவனங்கள், 'மெலனோமா' எனப்படும் உயிர் பறிக்கும் தோல் புற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பாதி கட்டத்தை தாண்டியுள்ளன. அந்த வகையில், புற்று நோய் தடுப்பூசிகள் உருவாக்கும் பணிகளில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக, களத்தில் இறங்கி வேலை செய்து வந்தனர்.சமீபத்தில், 'ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கிடைக்கும்,'' எனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று (டிச.,18) புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். 2025ம் ஆண்டின் துவக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும் என ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.முக்கியமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துக்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கூறியதாவது: புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக என்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.ஆண்டுதோறும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால், புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Venkat Subbarao
டிச 18, 2024 19:49

இது உண்மையாக இருந்தால் இவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று உலக சுகாதார நிறுவனம் இதை விரைவில் அங்கீகரிக்க வேண்டும்


raja
டிச 18, 2024 17:47

வாழ்த்துக்கள்..


என்றும் இந்தியன்
டிச 18, 2024 17:41

அதான் இப்போ நிறைய வீடியோ வைரலாக வருகின்றதே அதில் மஞ்சள் தூள் கிராம்பு எலுமிச்சம்பழம் தேன் வெதுவெதுப்பான இந்த ஜூஸ் குடித்தாலே போதுமாம் புற்று நோய் சாகக்கிடந்தவர்கள் பிழைத்துக்கொண்டார்களாம்


Barakat Ali
டிச 18, 2024 17:17

திராவிட மாடல் என்னும் புற்றுநோய்க்கு யாருமே மருந்து கண்டுபுடிக்கலையே கோவாலு .....


ArGu
டிச 18, 2024 18:27

ஷோக்கா சொன்னபா


Madras Madra
டிச 18, 2024 16:35

இதுதான் சாதனை இலவசமாக கொடுக்கப்பட்டால் ரஷ்யா வரலாறு படைக்கும்


Sambath
டிச 18, 2024 16:22

இதுல என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுமோ???


Bahurudeen Ali Ahamed
டிச 18, 2024 16:01

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்


Senthilvel
டிச 18, 2024 15:12

இது மட்டும் உண்மை என்றால் ரஷ்யாவிற்கு உலக மக்கள் அனைவரும் கடமை பட்டுள்ளோம்.


Narayanan Ganesan
டிச 18, 2024 15:00

போர் இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்யுங்கள். மக்கள் மேல் போர் தொடுத்து உயிரிழப்புகள் ஏற்படும்போது நீங்கள் புற்று நோய் மருந்து கண்டுபிடித்து என்ன சாதனை செய்யப்போகிறீர்கள்


பேசும் தமிழன்
டிச 19, 2024 08:15

உன் எதிரி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தால் பரவாயில்லை.. உன் வீட்டு வாசலில் வந்து நிற்பேன்.... ஆனால் நீ ஒன்றும் சொல்ல கூடாது என்றால் எப்படி... அது போல் சும்மா இருந்த ரஷ்யா நாட்டை. சொறிந்து விட்டு .... உக்ரைன் நாட்டில் கொண்டு போய் NATO நாடுகளின் படையை நிறுத்துவோம் என்றால் எப்படி ???


Amsi Ramesh
டிச 18, 2024 14:48

உலகமே வாழ்த்தும் உங்களை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை