உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தீவிரமடைந்த ரஷ்யா - உக்ரைன் போர்; கீவ் நகரில் அமெரிக்க தூதரகம் மூடல்

தீவிரமடைந்த ரஷ்யா - உக்ரைன் போர்; கீவ் நகரில் அமெரிக்க தூதரகம் மூடல்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா - உக்ரைன் அணிகளுக்கு இடையிலான போர் 1,000வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் வலுவாக சண்டையிடுவதற்கு காரணமே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஆயுத உதவிகளை வழங்கி வருவது தான். ரஷ்யாவுடன் வடகொரிய படைகளும் இணைந்து தாக்க இருப்பதாகவும், இதனால், தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவிற்குள் தொலைதூரத்திற்கு சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதியளிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். இதனால், கடுப்பான ரஷ்ய அதிபர், ரஷ்ய படைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி கொடுத்தார். இதனால், போர் தீவிரமடைந்துள்ளது. எந்த நேரமும் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும், உக்ரைன் வாழ் அமெரிக்கர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthikeyan Mani
நவ 20, 2024 21:15

பைடன்செய்யும் தவறான முடிவு இந்த உலகை எங்கு கொண்டு முடிக்குமோ?


Duruvesan
நவ 20, 2024 19:27

முட்டாள், உலக ஆயுத விற்பனை கு deep state செய்த சம்பவம், ஜனவரி 20 க்குள்ளே எவ்வளவு நாசம் பண்ண போறீங்க?


shanker
நவ 20, 2024 18:42

தன்னிடம் உள்ள பல செல்லாத ஆயுதங்களை விற்று காசு பார்த்து விட்டது அமெரிக்கா. உக்ரைன் அதிபரை எதிர்கால தலைமுறை மறக்காது, மன்னிக்காது.


kantharvan
நவ 20, 2024 22:50

அவர் ஒரு யூதர் என்பதும் முதல் இரண்டு உலகப்போர்களுமே அவர்களால்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகர்களை நம்பி மோசம் போனது உக்ரைன்.


Rpalnivelu
நவ 20, 2024 16:15

ஒரு காமெடியானால் உலகம் ட்ராஜெடி ஆகப் போகிறது.


சமீபத்திய செய்தி