உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா

வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவின் கின்சால் ஏவுகணைகள், உக்ரைனின் சீவ், கார்சீவ் ஆகிய நகரங்கள் மீது நடத்திய தாக்குதலில் வானுயர கட்டங்கள் தரமட்டமாகின. இதில் சிக்கி பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இது போன்ற ஏவுகணைகள் ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் போரில் வடகொரியா வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. இதனை தேசிய அமெரிக்க தேசி பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

NicoleThomson
ஜன 05, 2024 15:03

வடகொரியாவை இவ்ளோ நாள் மட்டம்தட்டி எழுதியது எல்லாம் புஸ்?


அப்புசாமி
ஜன 05, 2024 11:53

எல்லாம் மேட் இன் சைனா தான். நேரடியா வித்தா அமெரிக்காவுடன் தகராறு வரும்னுட்டுதான் வடகொரியா மூலம் விக்கிறாங்க.


பேசும் தமிழன்
ஜன 05, 2024 08:02

ஏண்டா... ரஷ்யாவிடம் இல்லாத ஏவுகணையா வட கொரியா வைத்து இருக்கிறது.... பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது... உக்ரைன் நாட்டுக்கு ஆயுதங்கள் கொடுத்து... சண்டை ஓயாமல் பார்த்து கொண்டு இருப்பது நீங்கள் தான் !!!!


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி