உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

 ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: '' உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு இல்லை என்றாலும், அமைதி திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது,'' என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடனான சந்திப்புக்கு பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

மறுப்பு

எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் - காசா போருக்கு முன்மொழிந்த அமைதி திட்டத்தை போலவே, ரஷ்யா - உக்ரைனுக்கும் அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு ரஷ்யா ஒப்புதல் தெரிவித்தது. அதே சமயம், இத்திட்டத்தில் அதிகமான அம்சங்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி உக்ரைன் ஏற்க மறுத்தது. இதையடுத்து, அமைதி திட்டத்தில் சிறிய மாற்றங்களை அமெரிக்கா செய்தது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் அதிபர் டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின், அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாவது: அமைதி திட்டம் குறித்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டு ள்ளது. ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் ஏற்படும் தோல்வி, மோதலை மேலும் நீட்டிப்பதுடன், அதிக உயிரிழப்புக்கும் வழிவகுக்கும்.

கையெழுத்தாகும்

நாங்கள் பேச்சின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், இந்த போர் நீண்ட காலத்துக்கு நீடிப்பதுடன், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவர். ஒப்பந்தம் கையெழுத்தாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதே நேரத்தில், அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை