உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முடிவெடுக்கும் மையங்களை தாக்குவோம்: உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

முடிவெடுக்கும் மையங்களை தாக்குவோம்: உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

மாஸ்கோ: ''அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவும், உக்ரைனின் முடிவெடுக்கும் மையங்கள் குறிவைத்து தாக்கப்படும்,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள் மீது, உக்ரைன் படைகள் மிகப்பெரிய, 'ட்ரோன்' தாக்குதல்களை சமீபத்தில் நடத்தின. இந்நிலையில், ஆஸ்தானா என்ற இடத்தில் நடந்த ராணுவம் தொடர்பான மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புடின் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jbgg7l4b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேட்டோ நாடுகள் ஒட்டுமொத்தமாக தயாரிக்கும் ஏவுகணையின் எண்ணிக்கையை விட, 10 மடங்கு அதிக அளவிலான ஏவுகணைகளை ரஷ்யா தயாரிக்கிறது. தேவையில்லாமல் எங்களிடம் வாலாட்டினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஏவுகணைகளை உக்ரைன் எங்கள் மீது ஏவினால், 'ஓரேஷ்னிக்' ஏவுகணையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். இதை, உலகின் வேறு எந்த நாட்டின் ஏவுகணையுடனும் ஒப்பிட முடியாது. இது போன்ற ஏவுகணையை மேற்கத்திய நாடுகள் தயாரிப்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லாதது.எங்கள் மீது தாக்குதலை தொடர்ந்தால், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள, போர் தொடர்பான முடிவுகளை எடுக்கும் மையங்களை குறிவைத்து ஓரேஷ்னிக் ஏவுகணைகளை ஏவுவோம். இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஓரேஷ்னிக் ஏவுகணை, அணு ஆயுதத்துக்கு நிகரானதாக கூறப்படுகிறது. இதை தான், உக்ரைனின் நிப்ரோவில் சோதனை முறையில் ரஷ்யா சமீபத்தில் ஏவியதாக கூறப்படுகிறது. இது, 5,500 கி.மீ., வரை சென்று தாக்கும் திறன் உடையது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
நவ 29, 2024 16:05

சொன்னாக் கேளுங்க. இது போருக்கான நேரமில்லை.


Rpalnivelu
நவ 29, 2024 15:11

ஐயா புடின் அவர்களே 2025 ஜனவரி முதல் வாரம் வரை மிரட்டிகிட்டே இருங்க. எதுவும் செஞ்சிடாதீங்க ப்ளீஸ். ஐனவரி ரெண்டாவது வாரம் ஜெலின்ஸ்கி ட்ரும்பின் அதிகாரத்தால் தற்கொலை செஞ்சுக்குவான்.


பேசும் தமிழன்
நவ 29, 2024 08:11

ரஷ்யா இந்தியாவின் நட்பு நாடு.... இந்தியா ரஷ்யாவின் பக்கமே நிற்க வேண்டும்.... அவர்கள் நமக்கு செய்துள்ள நன்மைகள் அவ்வளவு.


அப்பாவி
நவ 29, 2024 07:17

சீக்கிரம் ஆயில் விலையைக் குறையுங்க.


SUBBU,MADURAI
நவ 29, 2024 06:49

Looks like someone is desperate to provoke Russia to use nuclear weapons!


sundar
நவ 29, 2024 04:49

Astana is its capital of republic of Kazakhstan. Kazakhstan was part of Soviet Union but now its independence country and he(Putin) was here since 2 days. Kindly share the right message to people ??


J.V. Iyer
நவ 29, 2024 04:22

அரை மயக்கத்தில் எப்போதும் நினைவு தப்பி இருக்கும் ஒருவர்தான் அமெரிக்க ஜனாதிபதி பைடன். இன்னும் கொஞ்சநாட்கள் ஒப்பேத்தி போகவேண்டியதுதானே? இவருக்கு ஏன் வேண்டாத வேலை? அனாவஸ்யமாக இரு நாட்டிற்கும் நடக்கும் சண்டையை ஊதி ஊதி பெரிதாக்குகிறார்? ரஷ்யா அதிபர் புடின்னை எல்லோரும் ஆதரிக்க வேண்டும். பாவம் ரஷ்யா மக்கள், புடின்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை