உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிக சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்புங்க : சீனா அரசுக்கு அதிபர் வலியுறுத்தல்

அதிக சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்புங்க : சீனா அரசுக்கு அதிபர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அதிக சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சீனாவை மாலத்தீவு அதிபர் வலியுறுத்தியுள்ளார்.இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி நாடு மாலத்தீவு. இயற்கை அழகு மிகுந்த இந்நாட்டிற்கு சர்வதேச சுற்றுலாபயணியர் மொய்க்கின்றனர். அவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள்.பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன் லட்சத்தீவு சென்றார். அங்கு ஆழ்கடலில், 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' பதிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் வாக்கிங் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார் மோடி..இப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.இவ்வளவு அழகான லட்சதீவு இந்தியாவில் இருக்கும் போது மாலத்தீவுக்கு ஏன் நாம் சுற்றுலா போக வேண்டும் என்ற கருத்து தீயாக பரவியது. இந்த கருத்தை ஆட்சேபித்து மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் மோடியை விமர்சித்தனர். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படவே மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சீனா சென்ற முகமது முய்சு

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு முறைப்பயணமாக சீனா சென்றார். பியூஜியோ மாகாணத்தில் நடந்த வர்த்தக அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முகமது முய்சு பேசுகையில், மாலத்தீவு வளர்ச்சியில் சீனாவின் பங்கு அதிகம். தாராள வர்த்தக ஒப்பந்தம் மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது, ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கிறது. எனவே எங்கள் நாட்டிற்கு அதிக எண்ணிக்கை யிலான சுற்றுலா பயணிகளை சீனா அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 10, 2024 14:08

வலியுறுத்தல் ன்னு அவர் கெஞ்சினத கவுரவமா சொல்லியிருக்கீங்க ....


Rajasekar Jayaraman
ஜன 10, 2024 12:00

ஐயோ பாவம் மாலத்தீவு இனி பிச்சை எடுக்க வேண்டியதுதான் சீனாவிம் ஆரம்பம்.


ram
ஜன 10, 2024 12:00

வருவார்கள் ஓசியில்


Pandi Muni
ஜன 10, 2024 11:58

முதலில் சீனன் புகுவான் பின் அங்கிருக்கும் மூர்க்க மூடர்களை விரட்டி அடிப்பான். மூர்க கும்பல் இந்தியாவிற்குள் நுழையாமல் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். நல்லது தானே நடக்கிறது.


மு.செந்தமிழன்
ஜன 10, 2024 11:30

ஆமை புகுந்த வீடும், சீனா புகுந்த நாடும் உருப்படாது


Pandi Muni
ஜன 10, 2024 12:16

ஒரு வகையில் சீனன் இந்தியாவிற்கு உதவுகிறான். மூர்க்க நாடு எதற்கு உருப்பட வேண்டும்.


Anand
ஜன 10, 2024 10:46

சீனாவிடம் வலியே சென்று மாட்டுகிறான்..... இது அந்நாட்டின் அழிவுக்கு அறிகுறி.


Appan
ஜன 10, 2024 10:09

பிரபாகரன் அப்பவே மாலத்தீவை பிடித்தான்..LTTE மேல் இருந்த வெறுப்பில் ராஜிவ் இந்திய ராணுக்கத்தை அனுப்பி மாலத்தீவை மீட்டு அவர்களிடம் கொடுத்தான்..நன்றி இல்ல மாலைதீவு மக்கள்..இஸ்லாமியர்களுக்கு முதலில் மதம் அப்புறம் தான் மற்றவை..இந்தியாவில் பிஜேபி இப்போதான் இந்தியா சரித்திரத்தை மாற்றி எழுத்துகிறது..விரைவில் இதை செய்யணும்..


Muguntharajan
ஜன 10, 2024 10:04

Modi effect. Good or bad? Wait and see.


சங்கர்
ஜன 10, 2024 09:43

அய்யா அம்மா இந்தியாவோடு வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டோம் சீக்கிரம் பசியும் பட்டினியுமா அலையப்போறம். அதனால, யாராவது கொஞ்சம் சுற்றுலா பயணிகளை பிட்சை போடுங்கம்மா, அம்மா தாயே


Sampath Kumar
ஜன 10, 2024 09:31

இது ஆபத்துக்கு அறிகுறி


மேலும் செய்திகள்









புதிய வீடியோ