உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் வார விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.வடக்கு கரோலினாவின் தென்கிழக்கே உள்ள மேக்ஸ்டன் என்ற இடத்தில் வார விடுமுறை கொண்டாட்டம் நடந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 13 பேரை நோக்கி சுடப்பட்டது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்ததும் 150க்கும் மேற்பட்டோர் அஞ்கிருந்து தப்பிச் சென்றனர்.துப்பாக்கிச்சூடு நடத்தியது யார், அவர் கைது செய்யப்பட்டாரா, இறந்தவர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 26, 2025 00:04

அமெரிக்காவில் தினம் தினம் தீபாவளி. இந்த தேவையில்லாத தீபாவளி விழாவை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிபர்களும், இப்பொழுது உள்ள வாய் சவடால் அதிபர் ட்ராம்பாலும் நிறுத்தமுடியவில்லை. ஆனால் மற்ற நாட்டு விஷயங்களில் அழைப்பு இல்லாமலேயே மூக்கை நுழைப்பார்கள். எங்கேயோ பதுங்கி இருந்த ஒசாமா பின் லேடனை கொள்ள தெரிந்தவர்களுக்கு, கண் எதிரில் மக்களை சுட்டுத்தள்ளும் கொலையாளிகளை பிடித்து தண்டிக்கவோ, என்கவுண்டர் செய்யவோ துப்பில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை