உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குதிரைப்பந்தயத்துக்கு குட் பை சொன்னது சிங்கப்பூர்!

குதிரைப்பந்தயத்துக்கு குட் பை சொன்னது சிங்கப்பூர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 182 ஆண்டுகளாக நடந்து வந்த குதிரைப்பந்தயம், இன்றுடன் முடிவுக்கு வந்தது.சிங்கப்பூர், முன்பு பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் மலேசியாவுடன் ஒன்றிணைந்த நாடாக இருந்தது. அப்போது 124 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த குதிரைப்பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில், 182 ஆண்டுகளாக, தொடர்ந்து குதிரைப்பந்தயம் நடந்து வந்தது.இந்நிலையில், தனி நாடாகி அசுர வளர்ச்சி பெற்றுள்ள சிங்கப்பூருக்கு நிலம் தேவைப்பட்டது. மண் கொட்டி கடல் பரப்பை மேடாக்கி, நிலப்பரப்பு ஏற்படுத்திய அந்நாட்டு அரசு கட்டடங்களை கட்டி வந்தது. வீட்டு வசதி திட்டங்களுக்கு, வேறு என்ன காலி இடங்களை பயன்படுத்த முடியும் என்று ஆராய்ந்து, குதிரைப்பந்தய மைதானத்தை பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி மைதான நிலத்தை அரசு எடுத்துக்கொள்கிறது.இது குறித்து சிங்கப்பூர் டர்ப் கிளப் (எஸ்.டி.சி) எனப்படும் குதிரைப்பந்தய கிளப் நிர்வாகிகள் கூறியதாவது:சிங்கப்பூரில் 1842ம் ஆண்டு முதல் குதிரைப்பந்தயம் நடந்து வருகிறது. இன்று நடந்த கிரான்ட் சிங்கப்பூர் கோல்டு கோப்பைக்கான போட்டியோடு நிறைவு பெற்றது. வீட்டு வசதி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காத இந்த நிலத்தை சிங்கப்பூர அரசிடம் திருப்பி அளிக்கிறோம்.எங்களது கிளப்பில் பணியாற்றிய சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெயராஜூ உள்ளிட்ட தொழிலாளர்களும் பணியில் இருந்து விடைபெறுகின்றனர்.இவ்வாறு அந்த கிளப் நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
அக் 05, 2024 23:03

4ட மற்றும் டோட்டோவில் குதிரையை விட பல மடங்கு அதிகம் சூதாடுகிறார்கள். பசையுள்ள பார்ட்டிகள் பணத்தை அள்ளி வீசி சூதாடுகிறார்கள்.


Kamaraj
அக் 05, 2024 22:32

?????


Kamaraj
அக் 05, 2024 22:31

சிங்கப்பூர் மக்களின் பல வருட எதிர்பார்ப்பு. பல்லாயியரம் குடும்பங்கள் சூதாட்ட ஆபத்திலிருந்து மீட்படைவர் ?


Rajan
அக் 05, 2024 22:20

நம்ம ஊர்ல இருக்கிற குதிரை வீரன் சிலையை பரிசாக கொடுக்கலாம். அங்கே பயன்படும்.


Lion Drsekar
அக் 05, 2024 20:46

பாராட்டுக்கள் இதனால் பல குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுவிட்டன, இந்த நிகழ்வுக்கு சிலைவைத்துக் கொண்டாடுவார்களா ? அப்போதுதான் எதிர்காலத்தில் மக்கள் இந்த நிகழ்வை நினைவில் கொண்டு நன்றி கூறுவார்கள், ஹிரண்யாய நமஹ


sankaranarayanan
அக் 05, 2024 20:38

தமிழக அரசும் இதைத்தான் பின் பற்றுகின்றது ஆனால் பிறகு அந்த இடத்தில் பூங்கா அமைத்து கலைஞர் என்று பெயர் வைக்கவே மாபெரும் யோஜனை அங்கே கலைஞ சிலை அமைக்கப்பட்டு கலைக்கான ஏற்பாடுகள் செய்வார்கள்


ராமகிருஷ்ணன்
அக் 05, 2024 20:29

பொம்மை குதிரை பந்தயத்தில் பணம் கட்டி விளையாடி சூதாடும் குணம் கொண்டவர்கள் சீனர்கள். அந்த தீவில் குதிரை பந்தய நிறுத்தம் அவர்களுக்கு வருத்தம் அளிக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை