உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அழைக்கிறது இலங்கை: 35 நாடுகளுக்கு சுற்றுலா விசா தாராளம்

அழைக்கிறது இலங்கை: 35 நாடுகளுக்கு சுற்றுலா விசா தாராளம்

கொழும்பு: விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வர 35 நாடுகளுக்கு இன்று அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது . இலங்கையை பொறுத்தவரை பழம்பெரும் கோயில்கள், மக்களை கவரும் விதமான கடற்ரை போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விஷயமாக உள்ளது.சமீபத்திய ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அதிகம் பேர் 2,46,922 பேர் வந்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பிரிட்டனில் இருந்து 1,23,992 பேர் இலங்கை வந்துள்ளனர். இலங்கையில் ஏறத்தாழ இரண்டே கால் கோடி பேர் வசிக்கின்றனர். இந்த நாட்டின் பொருளாதாரம் கோவிட்டிற்கு பின்னர் பெரும் சரிவை சந்தித்தது. வரும் காலங்களில் இலங்கை பொருளாதாரம் மேம்படும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கை விசா இல்லாமல் இலங்கை வர அனுமதி அளிக்கப்பட்டுள்ள முக்கிய நாடுகள் விவரம் வருமாறு; இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, தாய்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், கசகஸ்தான், சவுதிஅரேபியா, யு.ஏ.இ., நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அடங்கும். இலங்கை சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் பொருளாதாரத்தை சீர்தூக்கி நிறுத்த முடியும் என போக்குவரத்து துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தனா கூறியுள்ளார்.

26 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்

இது வரை உலக அளவில் இந்தியர்கள் தாய்லாந்து, பூடான், மலேசியா, பிஜீ என 26 நாடுகளுக்கு விசா இல்லாமல் சுற்றுலா செல்ல முடியும். தற்போது இலங்கையும் சேருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Iniyan
ஆக 22, 2024 19:36

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு ஆன் அறைவல் இந்தியர்களுக்கு பல ஆண்டுகளாக உள்ளது என்ன இருந்தாலும் ஆன் லைன் விசா எடுத்து செல்வது தான் சரி. உலகில் எந்த நாடும் விசா இல்லாமல் அந்நியர்களை அனுமதிக்காது விசா அங்கு போய் சேர்ந்த பிறகு எடுக்க வேண்டும். அது எல்லாம் நேரமாகும் ஆகையால் ஆன் லைன் விசா எடுத்து செல்வது சிறந்தது


chennai sivakumar
ஆக 22, 2024 17:53

இலங்கை குட்டி சுவர் ஆக்கப்பட்ட ஒரு எழில் வளம் மிகுந்த நாடு.what to do??


Ramanujadasan
ஆக 22, 2024 17:04

இலங்கையின் இந்த முடிவுக்கு காரணகர்த்தா எங்கள் ஆமை சீமான் தான் . அவரின் கட்டளைக்கு கட்டு படாத உலக அரசு எங்கேனும் உளதோ ? அண்ணன் இன்னும் கொஞ்ச நாளில் சந்திரனுக்கும் , சூரியனுக்கும் கூட உத்தரவிடுவார் பாருங்கள்


Ramanujadasan
ஆக 22, 2024 17:00

சுனாமியால் அழிந்தது LTTE , Covid ஆல் அழிந்தது இலங்கை பொருளாதாரம் .


Ramanujadasan
ஆக 22, 2024 16:41

இலங்கை சென்று நமது பணத்தை செலவு செய்வதற்கு பதில் இங்கேயே இந்தியாவிலேயே நமது பணத்தை செலவு செய்தால் நமது பொருளாதாரம் உயரும் , பணம் இங்கேயே இருக்கும் நமது மக்கள் பயன் பெறுவார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை