உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு குரல்

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு குரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு : இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13வது அரசியலமைப்பு திருத்த தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கையில் இனப் பிரச்னைக்கு தீர்வு காண, முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ், முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்தனே இணைந்து, 1987ல் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் 13வது திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை உருவாக்கினர்.அரசியலமைப்பு சட்டம் 13ஏ தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்குகிறது. இந்த திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் வாயிலாக இலங்கையில் உள்ள எல்லா சமூக மக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என, நம்பப்படுகிறது.இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையின் பெரும்பாலான தமிழ் கட்சிகள் கோரி வருகின்றன. இந்தியாவும் அவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.இந்நிலையில், தமிழர்கள் பெரும்பான்மை வகிக்கும் யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:இந்த, 13வது திருத்தத்தின் விதிகளை நாம் ஆராய்ந்தால், வலுவான உள்ளூர் பொருளாதாரத்தை நிறுவுவதற்கு போதுமான அதிகாரம் உள்ளது. அந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என உறுதியளிக்கிறோம். அதற்கான முன்முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் என நான் ஊக்குவிக்கிறேன்.தற்போது, மேற்கு மாகாணம் சுதந்திரமான செலவினங்களைச் செய்யக்கூடிய ஒரே பிராந்தியமாக உள்ளது. மற்றவை நிதி ரீதியாக அதைச் சார்ந்திருக்கின்றன.இதனால் இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை அவசியமாகிறது. 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக ஒவ்வொரு மாகாணமும் வளர்ச்சிக்கான பாதையை பட்டியலிட முடியும். இந்த அதிகாரங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஜன 06, 2024 14:32

கல்வியிலும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு(POLICY OF STANDARDISATION ) அளித்ததால்தான் அங்கு இனக்கலவரம் ஏற்பட்டது.???? பிரிவினைவாதமும்தான். அந்த இடஒதுக்கீடு சட்டத்தை இங்குள்ள திராவிட அரசியல்வாதிகள் எதிர்த்தார்கள். ஊருக்கு ஒரு நியாயம். தனக்கு வேறு நியாயம்.


K.Muthuraj
ஜன 06, 2024 18:36

இலங்கையின் நிலவரம் நமக்கு சற்றே புரிபடவில்லை. இலங்கையில் வடபகுதியில் இனக்கலவரம் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் கொழும்புவில் (தலைநகரம்) சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் உள்ளனர் (அன்றைய கொழும்போ மக்கள்தொகையில் இது சுமார் இருபது சதவீதம்) என்று தகவல்கள் வந்தது. அவர்களில் பெரும்பான்மையினர் நல்ல நிலையில் தொழில் செய்து கொண்டிருந்தனர். தமிழர்களை சிங்களவர்கள் ஒதுக்கினால் அவர்களால் நல்ல நிலைக்கு வந்திருக்க முடியாது. அங்குள்ள தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நல்ல புரிதல் இருந்துள்ளது. ஆனால் வடக்கு பகுதியில் எவ்வாறு பிரிவினை சித்தாந்தம் உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஜெயவர்த்தனே காலத்தில் மட்டுமே மக்களிடம் பிரிவினை உண்டாக்கும் பிரச்சாரம் செய்யப்பட்டது போல் தெரிகின்றது. இன்றைய இஸ்லாமிய நாடுகளில் பிரபலமாயுள்ள மனித வெடிகுண்டு கலாச்சாரத்தின் முன்னோடிகள் நமது இலங்கை விடுதலைப்புலிகள் கூட கொழும்புவில் பல வெடி நிகழ்வுகளை நிகழ்த்தும் பொழுது அந்த ஊரில் சாதாரண மக்கள் போல சென்று வந்துள்ளனர். கெடுபிடிகள் தமிழர்கள் மீது இருந்தது உண்மை என்றால் இவ்வாறு சென்றிருக்க முடியாது. இதனால் அங்குள்ள மக்களுக்கு சில நேரங்கள் தவிர எப்பொழுதும் சிங்களவர்கள் எந்த பாரபட்சமும் காட்டியதாய் தெரியவில்லை.


ஆரூர் ரங்
ஜன 06, 2024 14:27

13 வது திருத்தத்தின் முக்கிய அம்சம் போலீஸ் துறையும் நிலங்களும் ( காணித் துறை) மத்திய சிங்கள வெறி அரசிடமே இருக்கும். இப்போதே ஏழைத் தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பிடுங்கி ராணுவப் பயன்பாட்டுக்கு???? கையளிக்கப்பட்டுவிட்டது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பாதியளவு நிலங்கள் ராணுவ உதவியுடன் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சீன MNC க்கள் வசம். இலங்கைக் காவல்துறை எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத ஏராளமான தமிழ் இளைஞர்களை கைது செய்து நிலமும் காவல்துறையும் உள்ளூர் மாகாண அரசிடம் அளிக்காத 13 வது திருத்தச் சட்டத்தால் பயனெதுவுமில்லை.


மோடி வாழ்க
ஜன 06, 2024 13:33

எல்லாம் மெஜிக் !!


கிருஷ்ணதாஸ்
ஜன 06, 2024 13:18

1. இவரை சிங்களர்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது தெரிகிறது. 2. ராஜபக்ஷே குடும்பம் பதவிகளுக்கு திரும்ப வருவதும் தெரிகிறது.


Sampath Kumar
ஜன 06, 2024 11:53

நரித்தனத்தை மீண்டும் காட்டாதே சீக்கிரம் ஸ்ரீலங்காவே அழியப்போகுது அதுனால போர்போக்கில் ஏதையாவது சொல்லிவைக்கலாம் என்று என்னமா ?


NicoleThomson
ஜன 06, 2024 10:14

முன்னெடுக்க வேண்டிய நிகழ்வுகள் , இலங்கை தமிழர்களின் தரப்பு வாதங்களையும் படிக்க ஆசை


Siddhanatha Boobathi
ஜன 06, 2024 10:10

இலங்கை விவகாரத்தில் முழுவதும் நல்லெண்ணமும் செயல்பாடும் இருந்த ஒரே பிரதமர் ராஜீவ்காந்தி ஆனால் அவருக்கு அனுபவம் பத்தவில்லை அவர் ஏற்படுத்திக் கொடுத்த 13 வது திருத்தத்தை அமல்படுத்தத்தான் இந்த அளவும் இந்த போராட்டம்


ஆரூர் ரங்
ஜன 06, 2024 14:18

13 வது திருத்தம் அபத்தம் .


Eswar
ஜன 06, 2024 08:18

இலங்கை நாட்டின் ஆணி வேரான தமிழனுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள்


ராஜா
ஜன 06, 2024 06:39

இது இப்போதைய இந்திய அரசால் சாத்தியபட்டு இருக்கிறது. ஆனால், நன்றி மறப்பவன் தமிழன்.


Ramesh Sargam
ஜன 06, 2024 06:32

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்தாலும், திமுக போன்ற கட்சிகளின் ஆதரவை அங்குள்ள தமிழர்கள் நிராகரிக்கவேண்டும். மேலும் வைகோ, சீமான், திருமா போன்றவர்களை ஒதுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்