உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்துங்கள்; இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்

போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்துங்கள்; இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த நாட்டின் 3 ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய நிலைகள் மீது நடத்தப்படும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை இந்திய ராணுவம் துல்லியமாக முறியடித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hscg97gz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேவேளையில், ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த சூழலில், இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உயர் பிரதிநிதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்.,22ம் தேதி நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இருநாடுகளின் மோதல் காரணமாக பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச தாக்குதலை நிறுத்த வேண்டும். இருநாடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்பில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம் உடனடியாக தாக்குதலை நிறுத்தி விட்டு, இருநாடுகளும் அமைதி திரும்புவதற்காக நேரடி பேச்சுவர்த்தை நடத்த வேண்டும். நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். தூதரக ரீதியாக தீர்வு காண தயாராக இருக்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

spr
மே 10, 2025 18:58

பாகிஸ்தான் நேரடியாக இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தாலன்றி வேறு எவர் சொல்வதனையும் நம்பியும் நம் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்தக் கூடாது. பாகிஸ்தான் நம்பத் தகுந்த நாடல்ல இஸ்லாமியரும் மதத்திற்காக எந்த துரோகச் செயலும் செய்வார்கள் பயங்கரவாதத்தைக் கண்டிக்க மாட்டார்கள் என்பதுவும் உலகறிந்த உண்மை. பன்னாட்டுச் சக்திகளுக்கு இப்போர் அவர்களது ஆயுதங்கள் எப்படிச் செயல்பட்டன அவற்றில் என்ன மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென அறிந்து மேம்படுத்தக் கிடைத்த வாய்ப்பு. மறுபடி அவர்களிடம் இரு நாடுகளும் மறுபடியும் ஆயுதங்களை வாங்க வேண்டுமென எதிர்பார்ப்பது உறுதி அதற்காக போர் நடக்க இரு நாடுகளையும் மறைமுகமாக உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பார்கள். சமாதானம் பேச உதவுவதாகக் கூறும் அவர்களின் உதவியை மோடி தனக்கே உரிய சாணக்கிய தந்திர வழியில் எதிர்கொள்ள வேண்டும். நதி நீய்ப் பங்கீடு, ஆக்கிரமிப்புக் காஷ்மீர் விடுதலை எனப் பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்க்க உதவுமானால் மட்டுமே இந்த முயற்சியை மேற்கொள்ளலாம்


Haja Kuthubdeen
மே 10, 2025 18:43

எப்பவுமே ஐரோப்பிய அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் நியாயமா நடந்து கொள்ளாது என்பதற்கு இது உதாரணம்.பாதிக்கப்பட்டவனையும் பாதிப்புக்கு உள்ளாக்கியவனையும் ஒரே தட்டில் வைத்துள்ளது...பயங்கரவாதிகளை அடக்கி ஒடுக்கனும் என்று பாக்கிற்கு அல்லவா புத்தி சொல்லனும்.


India our pride
மே 10, 2025 12:36

ஐரோப்பிய அமெரிக்கா நாடுகள் அவனுக்கு ஒரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி என்பதை சட்டமாக வைத்து உள்ளன. நீ இஸ்ரேலுக்கு போய் நீதி போதனை நடத்து. இன்னும் 50 ஆண்டுகள் பாக்கிஸ்தான் தலை எடுக்க முடியாத நிலைமைக்கு கொண்டு சென்ற பின் நிலத்தை பிடித்து வைத்து கொண்டு பேச்சு வார்த்தைக்கு சம்மதிக்கலாம். இதை செய்யாதது தான் 70 ஆண்டுகாலம் நமது நாட்டை ஆண்டவர்களின் தவறு. பிடித்த நிலத்தையும், 93000 ராணுவ வீரர்களையும் திருப்பி கொடுத்து விட்டு அவனது பிரியாணிக்கு மயங்கிய கூட்டம் தான் இது. இதில் முந்தைய மயிலாடுதுறை எம்பியும் சிவகங்கை சீமானும் அடங்குவர்.


ديفيد رافائيل
மே 10, 2025 12:04

அவரவர்க்கு பாதிப்பு ஏற்பட்டால் தான் தெரியும் போல. அதுவரை வெளியில் இருந்து பாக்குறவங்களுக்கு வேடிக்கை மற்றும் விளையாட்டாக தெரியும் போல. நான் சொல்றது G7


Ravi
மே 10, 2025 11:32

Please do not show our eternal enemy Pakistan's Flag next to our Nation Flag. Jai Hind


Murthy
மே 10, 2025 11:31

இதை இசுரேலிடம் சொல்லியதா ??


c.mohanraj raj
மே 10, 2025 11:20

பாகிஸ்தானை முடித்துவிட்டு போரை முடித்து விடலாம் இது நன்றாகத் தான் இருக்கிறது


Shankar
மே 10, 2025 11:00

ஒரு முடிவு தெரியாமல் போரை எந்த காரணத்தைக்கொண்டும் நிறுத்தக்கூடாது. போதும் இவர்களுடைய தொல்லைகள். காலம் காலமாக பொறுத்துக்கொண்டிருக்கிறோம்.


Balamurugan
மே 10, 2025 10:42

அறிவுரை சொல்லும் நாடுகளின் உள்ளே சென்று அப்பாவி மக்களை கொன்றால் பேச்சவார்த்தைக்கு தான் போவீர்களா? தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்ல அருகதை இல்லை. இந்தியா ஐநா விலிருந்து வெளியேற வேண்டும். நம்மை காப்பாற்ற நமக்கு தெரியும் இவனோட அறிவுரைகளும் தேவை இல்லை. தீவிரவாதி இனி ஒரு போதும் பாகிஸ்தான் ஆதரிக்காது என்று இந்தியாவுக்கு உலக நாடுகளின் முன்னிலையில் அமைதிக்கான பிராமண பத்திரத்தை எழுதி கொடுத்து பகிரங்க மன்னிப்பு கேட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் இல்லையெனில் பாகிஸ்தானை ஒரு கை பார்க்காமல் போரை நிறுத்த கூடாது. நியாயம் தர்மம் பார்க்காமல் இந்திய அணுகுண்டை பாகிஸ்தான் மீது போட வேண்டும். பாக்கித்தானுக்கு அந்த வாய்ப்பை கொடுத்து விட கூடாது. போர் விதிமுறைகளை பின்பற்றாமல் துவம்சம் செய்யவேண்டும்.


Ranganathan PS
மே 10, 2025 08:59

பாகிஸ்தான் அழிந்து பின் போரைநிறுத்திவிடவோம்


புதிய வீடியோ