உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து கிரீசில் வேலை நிறுத்த போராட்டம்

தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து கிரீசில் வேலை நிறுத்த போராட்டம்

ஏதென்ஸ்:கிரீஸ் அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டின் அரசு நிறைவேற்றியுள்ள புதிய தொழிலாளர் சட்டம் மற்றும் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வேலை உள்ளிட்ரடவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, கிரீஸ் வீதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் போராட்டங்களில் ஈடுபட்டதுடன், பேரணியாக சென்றனர்.பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் 24 மணி நேர வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தால் அந்நாட்டின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. வேலைநிறுத்தம் காரணமாக ஏதென்சில் டாக்சிகள், ரயில்கள் ஓடவில்லை. இதற்கிடையே பேருந்துகள், டிராம் மற்றும் மெட்ரோ சேவைகளும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. நாடு முழுதும் ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதால், பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், நகராட்சி நிர்வாகங்களின் பொது சேவைகள் பாதிக்கப்பட்டன. அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தை 'நவீன அடிமைத்தனம்' என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ