உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல்: காரணம் என்ன?

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல்: காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திட்டமிட்டப்படி ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் ஜூன் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர்.ஜூன் 5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு, ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர். 9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர். தற்போது, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விண்வெளி மையம் சென்ற இருவரும் திட்டமிட்டபடி ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்; ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டது. சுனிதா வில்லியம்ஸை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா கோரலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S Sivakumar
ஜூன் 25, 2024 18:55

நல்ல விண்வெளி வீராங்கனை மற்றும் வீரர் நலமுடன் புவி வந்தடைய எல்லாம் வல்ல தெய்வத்தின் ஆசிர்வாதம், துணை கிடைக்க வேண்டும்.


Vasudevan Ramasamy
ஜூன் 25, 2024 15:25

Wish her a safe Return


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ