உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஹாங்காங்கில் ஆதரவு

அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஹாங்காங்கில் ஆதரவு

ஹாங்காங்: ஊழலை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேக்கு இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இந்தியா தனது ஒற்றுமையை மீண்டும் நிரூபித்துள்ளது எனற வகையில் ஹாங்காங்கில் 21ம் தேதி மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஹாங்காங் கோவ்லூன் பகுதியில் கிங்ஸ் பூங்காவில் உள்ள இந்தியா கிளப்பில் 21ம் தேதி மாலை 4 மணிமுதல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மெழுகுவர்த்தி ஏந்தி, இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ன செய்லாம் என்பது குறித்து உரையாற்றுவார்கள். தேசபக்தி பாடல்களும் பாடப்படும்.

- ஹாங்காங்கிலிருந்து நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்