உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீது வரி 50 சதவீதமாகிறது: டிரம்ப் தொடர்ந்து அடாவடி

இந்தியா மீது வரி 50 சதவீதமாகிறது: டிரம்ப் தொடர்ந்து அடாவடி

வாஷிங்டன் : விதித்த கெடு நிறைவடைவதற்குள், அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இருமடங்காக அதிகரித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் வரை 25 சதவீதமாக இருந்த வரி, இனி 50 சதவீதமாக இருக்கும் என்று டிரம்ப்தெரிவித்துள்ளார்.ரஷ்ய கூட்டமைப்பால் அமெரிக்கா சந்திக்கும் மிரட்டல்களுக்கான தீர்வு என்ற பெயரிலான உத்தரவில் டிரம்ப் நேற்றிரவு கையெழுத்திட்டார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அதில்தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரி இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக அவர் விதித்துள்ள 25 சதவீத வரி, 21 நாட்களில், அதாவது வரும் 27ல் அமலுக்கு வரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தெரிய வந்துஉள்ளது என்றும், அதனால் அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பும் பொருட்களுக்கு கூடுதல் வரி 25 சதவீதம் பொருந்தும் என்றும் தன் உத்தரவில் டிரம்ப்தெரிவித்துள்ளார்.டிரம்பின் இந்த அறிவிப்பால், அமெரிக்காவில் அதிக இறக்குமதி வரி விதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில், பிரேசில், இந்தியா அதிகபட்சமாக 50 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.மியான்மர் 40, தாய்லாந்து, கம்போடியா தலா 36, வங்கதேசம் 35, இந்தோனேஷியா 32, இலங்கை, சீனா தலா 30 சதவீதம் வரி விதிப்பை சந்திக்கின்றன.அமெரிக்கா, இந்தியா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, ஆறாம் கட்ட பேச்சு நடத்த, வரும் 25ம் தேதி அமெரிக்க குழு இந்தியா வரவுள்ள நிலையில், கூடுதல் வரி விதிப்பான 25 சதவீதம் 27 ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கும் துறைகள்

* ஜவுளி, ஆயத்த ஆடை* ரத்தினங்கள், நகைகள்* இறால்* தோல், காலணிகள்* விலங்கு பொருட்கள்* ரசாயனங்கள்* மின்னணு, இயந்திர உபகரணங்கள்

விலக்கு பெற்றவை

* மருந்து பொருட்கள்* கச்சா எண்ணெய்* சுத்திகரிக்கப்பட்டஎரிபொருள்* இயற்கை எரிவாயு* நிலக்கரி, மின்சாரம்* கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன்

அநியாயம்: இந்தியா கண்டனம்:

'இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்தது நியாயமற்றது, நியாயப்படுத்த முடியாதது' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்கு பதிலளித்து, நம் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை:அமெரிக்க அரசின் நடவடிக்கை நியாயமற்றது; இந்தியா தனது தேச நலனைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நியாயப்படுத்த இயலாத, காரணமற்ற நடவடிக்கை என அமெரிக்காவின் செயலை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.சந்தை விலை நிலவரத்தைப் பொருத்து, சர்வதேச வர்த்தக விதிகளின் கீழ் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, அண்மைக் காலமாக அமெரிக்கா குறிவைத்துள்ளது.இது தொடர்பாக, ஏற்கனவே இந்தியா பலமுறை தன் நிலையை, நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், சந்தைப் போட்டி அடிப்படையிலான விலையில் தேச நலன் கருதியே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

suthan
ஆக 08, 2025 19:11

Ha ha my king


என்றும் இந்தியன்
ஆக 07, 2025 16:45

டிரம்ப் உனது எண்ணம் போல எப்படி வேண்டுமானாலும் செய்து கொள். இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்கள் இனி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடாது. அப்படி அந்த பொருட்கள் வேண்டுமென்றால் அவர்கள் இந்தியா வந்து இங்கேயே வாங்கிக்கொண்டு அமெரிக்கா செல்லுங்கள். 50% வரியுடன் அந்த பொருட்களை அங்கே வாங்கவேண்டாமே.


surya krishna
ஆக 07, 2025 14:53

இவருக்கு இந்தியர்கள் ஓட்டு போடலைனா தோத்துருப்பார் இவர் இப்போ நம்மல வந்து பாரு னு சொல்லுறார்.


Balasubramanian
ஆக 07, 2025 14:16

இதற்கெல்லாம் ஒரே தீர்வு! அணு ஆயுததிற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று திரண்டாற்போல் அமெரிக்காவின் அடாவடி வரி விதிப்பிற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று திரள வேண்டும். வணக்கம் டாலரில் இல்லாமல் ஒரு தனிப்பட்ட கரெனஸியில் நடை பெற வேண்டும்! உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க அதல பாதாளத்திற்கே சென்று விடும்!


Balaji
ஆக 07, 2025 11:50

நீங்கள் போடும் வரியால் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் அதி வேகமாக வளரும். நெருக்கடியை சமாளிப்பதில் நம் பாரத பிரதமர் மிகவும் திறமையானவர். இதை நாம் கொரோனா காலத்திலும், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் காலத்திலும், சிந்தூர் operations நேரத்திலும் பார்த்தோம்.


Anand
ஆக 07, 2025 11:07

இதற்கு பதிலடியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் விமானங்களுக்கு மிக கடுமையான வரியை உயர்த்துவார்கள்.... ஐரோப்பாவின் ஏர்பஸ் க்கு மாற வாய்ப்புள்ளது.


Murthigaru
ஆக 07, 2025 10:47

இந்தியா ஒரு போதும் பயப்பட தேவை இல்லை நமது மோடிஜி இருக்கும் வரை. இந்த மாதிரி டிரம்ப் மிரட்டலுக்கு adi பணிய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா இந்த மாதிரி பல கோமாளிகளை ஆயிரம் வருடங்களாக பார்த்து வருகிறது. ஜெய் ஹிந்த


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஆக 07, 2025 09:07

போரை நான் தான் நிறுத்தினேன். நிறுத்தவில்லை என்றால் வரி போர் நடத்துவேன் என்று சொன்னதில் உண்மை இருப்பதாக இதில் இருந்து உணர்கிறேன்.. ஆமாம்.. டோலாந்து ட்ரம்ப் தான் போரை நிறுத்தினார் என்று நம்ம ஆளு சொல்லிவிட்டால் இந்த வரி போர் முடிவுக்கு வந்துவிடும் என்று உணர்கிறேன். போர் நிறுத்த அறிவிப்பை முதலில் வெளியிட்டது யார் ..அதை ஹம்பட்டம் அடித்துக்கொண்டது யார் ....அதனால் உள்நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கமுடியாமல் மௌன சாமியாராக நின்றுகொண்டிருந்தது யார் ....உள்நாட்டு அழுத்தம் அதிகமானதால் பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடத்த மிகுந்த கஷ்டத்துடன் ஒப்புக்கொண்டது யார் ...அங்கு நடந்த விவாதம் எங்கு பொய் நின்றது ....அதற்க்கு அப்புறம் தான் இந்த வரி போர் ஆரம்பிக்கப்பட்டது என்று கூர்நோக்கினால் நம்ம ஆளு ஏழுகுதப்ப சிக்கிக்கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது ..... ட்ரம்ப் அழுத்தத்துக்கு போரை நிறுத்திவிட்டு இப்போ மேலே போகும் திசை தெரியாமல் அவஸ்தை படுவதும் .. அதனால் நாட்டுக்கு பெரும் பொருளாதார இழப்பு மற்றும் கௌரவ குறைவு ஏற்படுவதும் கண்கூடு .....


Raman
ஆக 07, 2025 11:36

Comments are foolish and total ignorance at highest level. Educate, learn and think before commenting. LKG stuff..


vivek
ஆக 07, 2025 14:27

no surprise


SANKAR
ஆக 07, 2025 14:38

I agree sir..but they are the majority.be happy that comments like ours are also published at times


vivek
ஆக 07, 2025 15:38

sometimes we need to laugh and relax by such foolish comments as they publish....ha...ha....


SUBRAMANIAN P
ஆக 07, 2025 17:54

உன் பெயரை பார்த்தாலே தெரியுது எப்பேர்ப்பட்ட புத்திசாலின்னு.


vivek
ஆக 07, 2025 23:14

சரியான சொன்னிங்க சுப்பு உங்க பெயரை...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2025 08:02

திமுக, காங்கிரசின் அடிமைகளுக்கு சந்தோசம் பொங்குதே.. சந்தோசம் பொங்குதே.. அமலுக்கு வந்தால் மொத்த இந்தியாவுக்கும் பாதிப்பு என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாம என்ன இது டிசைன் >>>>


மூர்க்கன்
ஆக 07, 2025 12:12

அதெல்லாம் கரெக்ட்டுதான் ஆனால் செயல்பட வேண்டிய அயலுறவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது. மிகவும் சக்தி வாய்ந்த நபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களை கோமாளியாக நினைப்பது தவறு. பல வகைகளில் அமெரிக்காவின் நீடித்த நிலைத்த உறுதியான உறவு நம் நாட்டிற்கு தேவை சும்மா அர்னாப் மாதிரி தேசபக்தி வெறிக்கூச்சல் போட்டு நம்முடைய வளர்ச்சியை நாமே கெடுத்து கொள்ள கூடாது. ட்ரம்ப் உடன் சாத்தியமான வரையில் பேச்சுவார்தையை நடத்த வேண்டும் நிச்சயம் ட்ரம்ப் புத்திசாலி நபர் இறங்கி வருவார். நாம் ராஜ தந்திர நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2025 14:04

வெளியுறவுக்கொள்கை சிறப்பாக இருப்பதால்தான் முன்பு அவ்வளவாக ஒட்டுறவு இல்லாத நாடுகள் கூட இந்தியாவுக்கு ஆதரவு நிலையை எடுக்கின்றன ..... பாகிஸ்தானின் குடிமக்கள் மட்டுமல்ல, பாக் தொழிலதிபரே கூட இந்தியாவை, மோடியை ஆதரிக்கும் நிலைமை..


Nathan
ஆக 07, 2025 07:53

ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் வாங்கிக் குவித்த லஞ்சத்திற்கு நன்கு செயல்பட்டு வருவது நன்றாக தெரிகிறது. அவர் அந்த நாடுகளிடம் எண்ணெய் விலையை உயர்த்த தான் லஞ்சமாக விமானம் பரிசாக பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் இனியும் அமெரிக்காவை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை