உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 120 பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பயங்கரவாதிகள்: பாக்., ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

120 பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பயங்கரவாதிகள்: பாக்., ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

பலுசிஸ்தான்: பயணிகள் 120 பேருடன் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தானில் உள்ள போலான் எனும் பகுதியில், பயணிகள் 400 பேருடன் சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று பலூச் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பினர் தாக்கினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7bwzf6mt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தண்டவாளங்களை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்து, நாசவேலைகள் செய்து தடுத்து நிறுத்திய பயங்கரவாதிகள், தடுக்க வந்த 6 ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.இந்த மோதல் சம்பவத்தின் போது பயணிகளில் பலர் தப்பி ஓடினர். எனினும், ரயிலில் இருந்த பலர் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டனர்.இச்சம்பவத்திற்கு தனி பலுசிஸ்தான் நாடு கோரி பயங்கரவாத செயல்களை செய்து வரும் பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசால் பயங்கரவாத அமைப்பு என்று வகைப்படுத்தப்பட்ட இந்த பலூச் விடுதலை ராணுவம், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.ரயில் கடத்தல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பலூச் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை:பலுசிஸ்தான் மாகாணத்தில் போலன் மாவட்டத்தின் மஷ்காப், தாதர் பகுதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட இச்சம்பவம் துல்லியமாக திட்டமிடப்பட்ட செயல். எங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், ரயில் பாதையை வெடி வைத்து தகர்த்து, ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தச் செய்தனர். போராளிகள் விரைவாக ரயிலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அனைத்து பயணிகளையும் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். பாகிஸ்தான் ராணுவம் அதிரடியில் ஈடுபட்டால், அதற்கு தக்க முறையில் பதிலடி தருவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பயங்கரவாதிகளின் பிடியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

சண்முகம்
மார் 12, 2025 10:50

பலூச்சி மக்கள் ப்ராஹூயி என்னும் திராவிட மொழி பேசுபவர்கள். இங்கே பல மக்களுக்கு திராவிட கலப்பு உண்டு.


Kumar Kumzi
மார் 11, 2025 23:30

மூர்க்கம் என்பது மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பு வெறியேறி விட்டால் தன் இனத்தையே விழுங்கி அழிக்கும் குணம் கொண்டது


Karthik
மார் 11, 2025 21:50

பக்கிஸ்தானிகள் ஊட்டி வளத்த கிடா ..ஞ்சிலேயே பாயுது. வேறென்ன.. தன்வினை தன்னைச்சுடும். அனுபவி ராஜா அனுபவி.


chakkaravarthi SK
மார் 11, 2025 20:30

பாகிஸ்தானுக்கு மிகவும் பிடித்த தீவிரவாதம் மருந்து போல ஆகிவிட்டது.


Karthik
மார் 11, 2025 21:42

ஜெலுசிலும் தேவைப்படும்..


தமிழ்வேள்
மார் 11, 2025 20:10

பலூச் விடுதலை ராணுவத்தின் வேலை... ரம்ஜான் மாதத்தில் செத்தாலும் 72 கிடைக்கும் என்பதால் பக்கி ராணுவத்தினர் ஹேப்பி.....கொன்றாலும் 72 செத்தாலும் 72.... நல்ல மார்க்கம்


Ramesh Sargam
மார் 11, 2025 19:59

பாகிஸ்தான் தீவிரவாதிகளை, பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டுகிறார்கள்.


Thiagaraja boopathi.s
மார் 11, 2025 19:57

அப்பாவி மக்களை மட்டும் துன்புறுத்த வேண்டாம் மற்றபடி வெற்றி


Pandi Muni
மார் 11, 2025 19:10

தீவிரவாதிகளுக்கே ஒரு பயங்கரவாதியா. நல்லா இருக்கு உங்க மார்க்கம்.


Karthik
மார் 11, 2025 21:39

அதி தீவிரவாத பயங்கரவாதியா இருக்கும் போல..


Mecca Shivan
மார் 11, 2025 18:53

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி


sankaranarayanan
மார் 11, 2025 18:18

பாகிஸ்தான் இந்திய எல்லையில் இந்தியாவிற்கு செய்யும் பயங்கரவாதங்களுக்கு பதில் கைமேல் அவர்களுக்கு பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் கொடுத்துள்ளனர் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றனர் தன்வினை தன்னைச்சுடும் என்பது நிரூபணமாகிற்று


முக்கிய வீடியோ