உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அன்புக்குரிய ஊழியர்களே...ஆதலினால் காதல் செய்வீர்: தாய்லாந்து கம்பெனி தாராளம்

அன்புக்குரிய ஊழியர்களே...ஆதலினால் காதல் செய்வீர்: தாய்லாந்து கம்பெனி தாராளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாங்காக்: தாய்லாந்து மார்க்கெட்டிங் கம்பெனி, தங்கள் ஊழியர்கள் காதலியுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதற்கு வசதியாக, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவித்துள்ளது. ஊழியர்கள் இணையத்தில் பகிர்ந்த இந்த செய்தி, காட்டுத்தீ போல் பரவி வருகிறது. தாய்லாந்து, பாங்காக்கில் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களில் ஒருவர், 'எப்போதும் மிகவும் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். டின்னர் சாப்பிட கூட ஒன்றாக வெளியே போக முடியவில்லையே' என தனது கஷ்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eja7mjlb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தகவல் முதலாளி வரை சென்றுவிட்டது. இதையடுத்து அந்நிறுவனம் ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை குஷிப்படுத்தவும் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. ஊழியர்கள், காதலியுடன் நேரம் செலவிட வசதியாக, சம்பளத்துடன் லீவு வழங்கப்படும் என்பது முதல் அறிவிப்பு.தேவையான நாட்கள் லீவு எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. உங்கள் நலனே எங்கள் நலன், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான் நிறுவனத்தில் வேலை நன்றாக நடக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.'எங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், காதலியுடன் டேட்டிங் செல்லவும் இந்த விடுப்பை பயன்படுத்தலாம்' என அந்நிறுவனம் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
செப் 05, 2024 19:27

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இதுபோன்று செய்தால், இந்திய பூமி தாங்காது. ஏன்? முதலில் காதல். பிறகு திருமணம். பிறகு? குழந்தைப்பேறு.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 15:12

ருசி கண்ட பூனை விடாது என்பார்கள் .....


sundarsvpr
செப் 05, 2024 14:21

அரசு அலுவலர்களுக்கு LTC என்ற சலுகை உண்டு. உண்மையாக பயணம் செய்து அதற்கான ஈடு தொகை பெறுகிறார்கள்எத்தனை உண்மை என்பதனை அரசு கூற இயலாது. அரசு ஊழியர் கொடுக்கும் சத்திய பிரமாணத்தை ஒட்டி தொகை ஈடு செய்யப்படுகிறது. வாய்மையே வெல்லும் என்பதுஅரசின் சத்திய வாக்கு. இந்த அரசின் கீழ் பணிபுரிவர்களும் சத்தியம்தான் கூறுவார்கள் என்று நம்புகிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை