உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  அமெரிக்கர்களுக்கு திறமையில்லை என வாய்விட்ட டிரம்ப்; எதிர்ப்பு கிளம்பியதால் சமாளிப்பில் இறங்கியது அரசு

 அமெரிக்கர்களுக்கு திறமையில்லை என வாய்விட்ட டிரம்ப்; எதிர்ப்பு கிளம்பியதால் சமாளிப்பில் இறங்கியது அரசு

வாஷிங்டன்: “திறமைவாய்ந்த வெளிநாட்டு தொழில் நிபுணர்கள், அமெரிக்கர்களுக்கு தேவையான பயிற்சியை அளித்துவிட்டு தங்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்பதையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார்,” என, அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், அமெரிக்க குடியேற்ற விதிகளில் கடுமை காட்டி வருகிறார். அதிர்ச்சி வெளிநாட்டு நிபுணர்களை அமெரிக்க நிறுவனங்கள், 'எச்1பி' விசாவில் பணியமர்த்தி வருகின்றனர். இந்த விசாவில் கணினி அறிவியல், பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் திறமை வாய்ந்த வெளிநாட்டினர் பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், எச்1பி விசா திட்டத்தை தவறாக பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் அந்நாட்டவரின் வாய்ப்பை சிதைத்து வருவதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியதுடன், எச்1பிக்கான கட்டணத்தையும் கடந்த செப்டம்பரில் பல மடங்கு உயர்த்தி அதிர்ச்சி அளித்தார். மேலும், அமெரிக்க நிறுவனங்களிடம், 'அமெரிக்காவில் உற்பத்தி செய்யுங்கள்; அமெரிக்கர்களையே பணிக்கு எடுங்கள்' என்ற கோஷத்தை முன்வைத்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: எச்1பி விசா எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவில்லை. திறமையானோர் மட்டுமே வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நம் நாட்டில் திறமைசாலிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. வேலையில்லாமல் இருப்பவர்களை நேரடியாக தொழிற்சாலைக்கு அனுப்பி ஏவுகணைகளை தயார் செய்யுமாறு கூற முடியாது. சில முக்கிய துறைகளுக்கு தேவையான திறன் நம்மிடம் இல்லை. அத்துறைகளுக்கு வெளிநாட்டு திறமையாளர்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்காவில் திறமைசாலிகள் இல்லை என்றும், அத்துறைகளுக்கு வெளிநாட்டு திறமையாளர்கள் தேவை என்றும் டிரம்ப் கூறிய கருத்துக்கு அமெரிக்கர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. 'அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்' என்ற அவரது கோஷத்துக்கு ஆதரவளிப்பவர்கள் உள்ளிட்ட பலர், டிரம்பின் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நோக்கம் இந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் நோக்கத்தில், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நேற்று அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது: அதிபர் டிரம்பின் கொள்கை உத்தி, 'அறிவு பரிமாற்ற உத்தி'யாகும். இது நிரந்தர குடியேற்றத்தையோ அல்லது வேலைகளை மாற்றுவதையோ ஊக்குவிக்கவில்லை. அதிபரின் பார்வை என்னவென்றால், திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களை உள்ளே கொண்டு வருவது, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, அமெரிக்க பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு, அவர்கள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டும். அதன்பின், அமெரிக்க பணியாளர்கள் அப்பணிக்கான முழுமையான பொறுப்பை ஏற்பர். தற்போது, செமிகண்டக்டர் மற்றும் கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றுக்கு திறமையான உள்நாட்டு பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை. இதுபோன்ற துறைகளுக்கு வெளிநாட்டு பணியாளர்களை பயன்படுத்தும் ஒரு வெற்றிகரமான திட்டம்தான் இது. அமெரிக்க தொழில்துறையின் அடித்தளத்தை கட்டமைக்க வெளிநாட்டு நிபுணத்துவத்தை பயன் படுத்தி கொள்வதையும், அதேநேரத்தில் அமெரிக்க பணியாளர்கள் அத்தொழிலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான திறன்களை பெறுவதையும் நோக்கமாகக் கொண்டது அதிபரின் திட்டம். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
நவ 14, 2025 09:37

அப்படி பார்த்தால் முதலில் இந்தியர்களிடமிருந்து முறையான ஆளுமை பயிற்சி பெறவேண்டியவர் இப்பொழுதுள்ள அதிபர் ட்ரம்ப். அவருக்கு எப்பொழுது பயிற்சியை ஆரம்பிக்கலாம் சொல்லுங்க.


Saai Sundharamurthy AVK
நவ 14, 2025 09:11

வெளிநாட்டு நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதன் நோக்கமே செலவு குறைவு என்பதால் தான் என்று வைத்துக் கொண்டாலும் உண்மையில் அமெரிக்கர்களிடையே படிக்கும் பழக்கம் சதவிகித அடிப்படையில் மிக மிகப் குறைவே! அப்படியே படித்து வந்து விட்டாலும் தெளிவு நிறைந்தவர்கள் என்பதும் மிகப் குறைவு. அவர்களை வேலைக்கு அமர்த்தி, பயிர்ச்சி கொடுத்து தேற்றுவது என்பது கால விரயம், நேர விரயம், பண விரயம் தான். அதனால் தான் அமெரிக்க கம்பெனிகள் வெளி நாட்டவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கிறது. அதாவது உதாரணமாக நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்து முதல் தேர்விலேயே தேர்ச்சி பெறுபவர்கள் தான் அவர்களுக்கு வேண்டும்.


Nagercoil Suresh
நவ 14, 2025 08:50

கிராமங்களில் கூறுவார்கள் ஆசான் கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டாமல் பார்த்துக்கொண்டார் அது போல பொது இடங்களில் சொல்லக்கூடாததை சொல்லிவிட்டு இன்னொருவரை வைத்து பூசி மொழுகிறார்..சொன்னதில் உண்மை உள்ளது அதே நேரம் அதிபர் சொல்லியது தான் தவறு...


அப்பாவி
நவ 14, 2025 08:01

அமெரிக்காவின் பேராசை பிடித்த கார்பரேட்கள் செய்த வேலை இது. சீனாவுக்கு தொழிற்சாலைகளை நகர்த்தி அமெரிக்க தொழிற்சாலை ஊழியர்களை ஒரம் கட்டுனாங்க. அப்புறம் சாஃப்ட்வேர் தொழிலுக்கு இந்தியர்களை அமர்த்தி அமெரிக்காவில் அந்த தொழில் செஞ்சவங்களும் ஃபணால். இப்போ அங்கே இருக்கிறவங்க பீட்சா டெலிவரி, ஓலா ஓட்டுதல், போன்ற gig வேலைகள் செஞ்சு பொழைக்கும் நிலைமைக்கு வந்துட்டாங்க. அதன் வெளிப்பாடுதான் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானது.


கண்ணன்
நவ 14, 2025 07:26

பெரும்பாலான அமெரிக்கர்களுள் முறையான படிப்பே இல்லை இதில் கொலை மற்றும் திருட்டு தவிர வேறென்ன திறமைகள் உள்ளதாம்?!


sankaranarayanan
நவ 14, 2025 07:03

உலகிலேயே இந்தியன் இல்லையென்றால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலைமை வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இப்போதாவது தெரிந்ததே புத்தி வந்ததே என்றுதான் ஆச்சிர்யப்பட வேண்டும் இனி இந்தியனை பகைத்துக்கொள்ள வேண்டாம் அவனை அனுசரித்துப்போனால் எந்த நாடும் எங்கிருந்தாலும் செழிக்கும் அவனும் நன்றாக வாழ்வான் வாழ்க்கை வையகம் வாழ்க மனித குலம்


Raj
நவ 14, 2025 06:40

அமெரிக்கர்களுக்கு திறமை இல்லை என்பது அவரை வைத்து சொல்கிறார் போல காரணம் சமீபத்தில் நடந்த வரி விதிப்பு ஒன்று போதும் அது போல இன்னும் பல. .......


ஜெய்ஹிந்த்புரம்
நவ 14, 2025 05:59

ஜார்ஜியாவில் கட்டப்பட்டு வரும் எல்ஜி LG மற்றும் ஹூண்டாய் Hyundai நிறுவனங்களின் கூட்டு பேட்டரி உற்பத்தி ஆலை கட்டுமான தளத்தில் அண்மையில் நடந்த ஐசிஇ ICE - U.S. Immigration and Customs Enforcement சோதனை தொடர்பான குழப்பம் அமெரிக்க தென்கொரிய வர்த்தக ஒப்பந்தத்தில் பெரும் முட்டுக்கட்டை ஆனது. இச்சோதனை மாபெரும் கொள்கை ரீதியான தோல்வியாகவும் பொருளாதாரத் தடங்கலாகவும் கருதப்படுகிறது. இது பற்றிய பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், தென்கொரியாவை சமாதானப்படுத்தும் விதமாக பேசிய டிரம்ப்பின் வார்த்தைகள் தான் தலைப்பாக வந்துள்ளது.


Kasimani Baskaran
நவ 14, 2025 03:58

H1B என்பது வேலை விசா. அந்த வேலைக்கு அமெரிக்காவில் ஆள் எடுத்து வேலை செய்யலாம் - ஆனால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும். தவிரவும் அது போன்ற வேலைகள் செய்ய பலர் முன்வரமாட்டார்கள். உற்பத்தி செலவு குறைவு என்பதால் பல தொழில்கள் அமெரிக்காவை விட்டு சீனா, தைவான், கொரியா, வியட்நாம் போன்ற வெளிநாடுகளை நோக்கி படையெடுத்தன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை