உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / திடீர் பல்டி ஏன்? சீனாவின் ஆதரவை நாடிய இலங்கை தமிழர் கட்சி

திடீர் பல்டி ஏன்? சீனாவின் ஆதரவை நாடிய இலங்கை தமிழர் கட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: எப்போதும் சீனாவை எதிர்க்கும் நிலை கொண்ட இலங்கையில் உள்ள தமிழர் கட்சி, தன் நிலையை மாற்றியுள்ளது இலங்கை அரசியலில் பரவலாக பேசப்படுகிறது. இலங்கையில் பிரபலமான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சுமந்திரன், சாணக்கிய ராஜபுத்திரன் ராஜமாணிக்கம், இலங்கைக்கான சீன தூதர் கியூ ஷென்கோங்கை சந்தித்து பேசினர். இந்த பேச்சில் இலங்கையில் நிலவும் தற்போதைய நிலவரம், வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் நலன் குறித்து ஆலோசித்துள்ளனர். இந்த பேச்சு பலன் உள்ளதாக இருந்ததாக தமிழ் எம்.பி.,க்கள் கூறியுள்ளனர்.

சீனாவே வீட்டுக்கு போ

கடந்த 2022 ல் இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பினர், 'சீனா ராஜபக்சேவுக்கு மட்டுமே நண்பராக உள்ளது. இலங்கைக்கு அல்ல' என்று வர்ணித்து இருந்தது. மேலும்' சீனாவே வீட்டுக்கு போ ' என்ற கோஷங்களுடன் பிரசாரத்தை முன்னெடுத்து பெரும் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த தமிழ் எம்.பி.,க்கள் சீன பிரதிநிதியை சந்தித்தது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Easwar Kamal
ஆக 30, 2024 18:11

இந்திய காட்சிகளை நம்பி ப்ரயோஜனம் இல்லை. அவன் அவன் தமிழ்களை பார்த்த வெறுப்பா இருக்குது. காங்கிரஸ் இருந்து இப்போ இந்த பிஜேபி வரை தமிழ் தனி தேசம் எதுவும் உருவகிரக்கூடாதுனு கண்ணும் கருத்துமா இருக்கானுவ. இதுல வேடிக்கை என்னவென்றால் சிங்கப்பூர் ஏர்போர்ட் தமிழ் பதாகைகளை perthu அதை தூக்கிவிட்டு ஹிந்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து உள்ளனர். முன்னாள் சிங்கப்பூர் அதிபர் அதை மறுது தமிழர்கள் சிங்கப்பூர் வளர பாடு பட்டுள்ளார் இந்திய தமிழர்கள் மட்டும் அல்லது இலங்கை தமிழ்களும் உள்ளனர் என்று சொன்ன பிறகு அடங்கி உள்ளனர். இவளவு இன புத்தி உள்ள இந்த ஒன்றிய காட்சிகala தமிழர்களின் நளனுக்கு போராட போகிறார்கள்? அதுதான் சீனாவை நாடுகிறார்கள்.


JP1967
ஆக 13, 2024 22:28

1000 லட்சம் எக்கர் நம்மிடமுள்ள நிலத்தை சீனர் எடுத்ததை மோடி எதிர்க வக்கில்லாத போது ஏன் தமிழ் தலைவர்கள் மேல் மட்டும் இந்த காட்டம் . என்ன பேரம் நடந்தன.?


செந்தில்குமார்
ஆக 13, 2024 19:33

இந்தியாவை நம்பி பலன் இல்லை என்று புரிந்து கொண்டு விட்டனர்.


Sridhar
ஆக 13, 2024 14:45

மாலத்தீவு மாதிரி துட்டு எங்கு கிடைக்குதோ அங்கேதான் போவோம்


subramanian
ஆக 13, 2024 13:22

சீனாவின் தந்திரம்...


subramanian
ஆக 13, 2024 13:13

பணம் படுத்தும் பாடு..... கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே....


nagendhiran
ஆக 13, 2024 13:10

தமிழன் புது ரகம்?


Ramesh Sargam
ஆக 13, 2024 12:19

திமுகவினரிடம் அவர்கள் பாடம் கற்றிருக்கவேண்டும். மேலும் மேல்படிப்பு காங்கிரஸ் காரர்களிடம் கற்றிருக்கவேண்டும்.


raj
ஆக 13, 2024 12:04

காசுக்கு விலை போவதில் அவர்கள் ஒன்றும் விதி விலக்கு இல்லை எங்கள் திராவிட மாடலில் இதெல்லாம் சகஜம்


Sampath Kumar
ஆக 13, 2024 11:27

எல்லாம் ஆரிய கும்பலிடம் கற்ற பாடம் தான் சந்தர்ப்பவாதம் சனாதன தர்மம் இப்படி சொல்லிக்கிடேயே போகலாம்


Anand
ஆக 13, 2024 12:26

சீனாவிற்கு விலை போவது, ........... கொடுப்பது எல்லாம் காங்கிரசின் பாரம்பரிய வழக்கம், அதைவிட இருபத்தி ஒண்ணாம் பக்க பேர்வழிகளுக்கு இது அத்துப்படி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை