உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை

அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : அரசு நிதியுதவி தடைபட்டதால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தற்காலிகமாக முடக்கத்திற்கு ஆளாகியுள்ளது.அரசு நிர்வாக செலவினங்களுக்கான பட்ஜெட் அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேறவில்லை. இதையடுத்து அங்கு அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. நிதி ஒதுக்கீடு இல்லாததால், அத்தியாவசியம் அல்லாத பல துறைகளின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், சம்பளம் வழங்க முடியாததால், ஊழியர்கள் தற்காலிக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.இந்த அரசு நிர்வாக முடக்கம், உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்படி, உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாக்க தேவையான அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான பணி, தற்போது இயங்கி கொண்டிருக்கும் விண்கலங்களை கண்காணிக்கும் பணி, சிறு கோள்கள் கண்காணிப்பு, கோள் பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் மட்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களில், 15,000க்கும் மேற்பட்டோருக்கு ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி அறிவியல் ஆய்வுகள், பொது கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு பணிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் புதுப்பிப்பு உள்ளிட்ட அத்தியாவசியமற்ற அனைத்து அன்றாட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது நீடித்தால், அதிகளவிலான பணி நீக்கங்கள் ஏற்படக்கூடும் என ஊழியர்களிடையே அச்சம் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சாமானியன்
அக் 04, 2025 08:16

அடிப்படை அமெரிக்க அரசியல் சட்டமே தவறு. இந்த மாதிரி சமயங்களில் பேரிடர், ஆக்ரமிப்பு, போராட்டங்கள், பஞ்சம் வந்தால் என்ன செய்வீர்கள் ? அதிபருக்கே அதிகாரம் இல்லை என்பதை அறிந்து அதிர்ந்து போனேன். சட்ட திருத்தம் வேண்டும். அதற்காவது அதிபருக்கு அதிகாரம் இருக்கா ?


Kasimani Baskaran
அக் 04, 2025 07:29

கடன் உச்சவரம்பை அதிகரித்து நோட்டடிக்க எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம்மதிக்க வேண்டும். இதில் சிக்கல். ஆத்தா தீம்க்காவும், தாத்தா தீம்க்காவும் சாராய தொழிலை எவ்வளவு நேர்த்தியாக செய்கிறார்கள் என்பதை டிரம்பருக்கும் அவரது எதிரிக்கட்சியினர்களுக்கும் பயிற்சியாக கொடுக்கலாம்.


somu g
அக் 04, 2025 04:41

என்ன நடக்கிறது அமெரிக்காவில்? ஏன் இந்த கதி?


Mani . V
அக் 04, 2025 04:15

வெகுவிரைவில் தமிழ்நாட்டையும் அப்பா குடும்பம் இந்த நிலைக்கு ஆக்கி விடும். 18 வயதுப் பால்குடி மாறாத பையன், 105 கோடி ரூபாய் போட்டு திரைப்படம் தயாரிக்கிறானாம் - அதுவும் சுயமாகக் சம்பாதித்து.. இதெல்லாம் அப்பா குடும்பம் மக்களிடம் கொள்ளையடித்தது.


M Ramachandran
அக் 04, 2025 00:53

சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் ஊழி யர்கள் அநத அந்த நாட்டிற்கு திரும்ப வேலாண்டிய சூழ் நிலை. இந்த நிலைக்கு கொண்டு வந்ததால் தான் ட்ரம்ப் தனக்கு உலகில் சிறந்த மனிதர் அவார்ட் கேட்டகிறார். இல்லையென்றால் அமெரிக்காவிற்கு அவமானமாம். ஒரு வகையில் இவர் புடினின் நண்பர் என்று கூறுவதற்கு இது காரணம்மோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை