உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடுமையான பின்விளைவு ஏற்படும்: நாடு கடத்தும் படங்களை வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை

கடுமையான பின்விளைவு ஏற்படும்: நாடு கடத்தும் படங்களை வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி துவங்கியது. இதுகுறித்த புகைப்படத்தை அந்நாடு வெளியிட்டு உள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுத்து நிறுத்துவோம். குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்து இருந்தார். இதன்படி அதிபராக அவர் பதவியேற்றதும்,'சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படாது என அறிவித்தார். மெக்சிகோ எல்லையில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியை அதிகாரிகள் துவக்கினர். இதன்படி சட்டவிரோதமாக குடியேறிய 538 பேரை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் சிலர் பயங்கரவாதிகள், பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தும் பணி துவங்கியது. சட்டவிரோதமாக குடியேறியதாக கைது செய்யப்பட்டவர்கள் விமானத்தில் ஏற்றும் புகைப்படங்களை வெள்ளை மாளிகை அதிகாரி கரோலின் லெவியாட் சமூக வலைதளப்பதிவில் வெளியிட்டு கூறியுள்ளதாவது: நாடு கடத்தும் விமானங்கள் கிளம்பின. ஒட்டு மொத்த உலகிற்கும் வலிமையான ஒரு செய்தியை அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவினால், நீங்கள் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்வீர்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ganeshkumar263
ஜன 29, 2025 09:37

Yes


Ganesh
ஜன 28, 2025 18:54

இதை நான் வரவேற்கிறேன்.... ஆனால் கவனிக்க பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது...இந்த சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்காவில் செய்த வேலை என்ன? அதனால் அமெரிக்கா விற்கு அந்த வேலையை யார் செய்வார்கள் இனிமேல்... இப்பொழுதே இந்த மாதிரி ப்ளூ காலர் ஜாப் செய்வதற்கு ஆள் இல்லை என்று நினைக்கிறேன்... இதற்கு பதிலாக புது விசா type அறிமுகபடுத்தி கண்ட்ரோல் செய்யலாம்... இல்லையென்றால் இது அவருக்கே சிக்கலாக முடியும்...


Nandakumar Naidu.
ஜன 25, 2025 10:44

இதே போல் இந்தியாவில் இருந்து பங்களாதேஷிகளை ஒட்டு மொத்தமாக நாடு கடத்த வேண்டும். அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் அந்த நாட்டுக்கே நாடு கடத்த வேண்டும்.


seshadri
ஜன 25, 2025 05:51

மிக சரியான செயல் இதை நான் நூறு சதவிகிதம் வரவேற்கிறேன். இந்த மாதிரி ஒரு தைரியமான தலைவர் இந்தியாவிற்கு தேவை. மோடி இந்த விஷயத்திலும் சரி ஊழல் பேர்வழிகளை தண்டிப்பதிலும் சரி நல்ல உதாரணமாக இல்லை. மற்ற விஷயங்களில் நான் மோடியை ஆதரிக்கிறேன்.


Tetra
ஜன 25, 2025 11:16

நீங்கள் 400 எம் பிக்கு மேல் கொடுத்திருந்தால் செய்திருப்பார். வெறும் 240 தை வைத்துக்கொண்டு என்ன செய்வார். நாயுடு நிதீஷ் நினைத்தாலும் முடியாது. ஓட்டு பொறுக்கிகளின் ஆதரவும் வேண்டும்.


Ray
ஜன 27, 2025 00:50

அதென்ன மற்ற விஷயங்களில்? அவை என்னவென்று குறிப்பிட்டு சொல்லக் கூடாதா?


chennai sivakumar
ஜன 25, 2025 05:26

டிரம்ப் அவர்கள் செய்வது மிக சரியான செயல். இந்தியாவில் நடைமுறை படுத்தினால் குறைந்தது ஒரு கோடி பேர் இருப்பார்கள். செய்வீர்களா? செய்வீர்களா?


Senthoora
ஜன 25, 2025 06:22

அங்கு போன குற்றவாளிகள் இந்தியாநந்து கை வரிசை காட்டுவார்கள், அவதானம் தேவை.


Kasimani Baskaran
ஜன 24, 2025 23:45

இந்தியாவும் இது போல கள்ளக்குடியேறிகளை வெளியேற்ற வேண்டும். இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் - வங்கதேசத்தவர்களுக்கோ அல்லது ரொகிங்கியாக்களுக்கோ சொந்தம் இல்லை.


Ray
ஜன 27, 2025 00:54

நம்ம நாலு நாடுகளிலும் போய் குடியேறலாம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் நம்மாளுங்க திரும்பி வந்து இறங்கும்போது என்ன சொல்ல போகிறோம்


Mediagoons
ஜன 24, 2025 23:00

துணை அதிபராக கமலா காரிஸ் வராமல் இருந்திருந்தாலும் இப்படி நடக்காமல் இருந்திருக்கலாம்


karupanasamy
ஜன 25, 2025 05:06

புள்ளகுட்டிங்களோட ரெடியாயிரு உன்னையும் பக்கிக்கு நாடுகடத்த போகிறோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை