உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஷ்மீர் வரலாறு இதுதான்: கதை அளந்த டிரம்ப்

காஷ்மீர் வரலாறு இதுதான்: கதை அளந்த டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்னை குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ''அது கிட்டத்தட்ட 1,000 முதல் 1,500 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை. உலகிலேயே நீண்ட காலமாக இருக்கும் விவகாரங்களில் ஒன்று,'' என, வரலாறு தெரியாமல் பேசியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப்பும் இதேபோல், பேட்டி அளித்துள்ளார், அவர் கூறுகையில், ''இது பல நுாற்றாண்டுகளாக இருக்கும் பிரச்னை. 1500 ஆண்டுகளாக அந்த பகுதியில் எல்லைப் பிரச்னை உள்ளது,'' என கூறியுள்ளார். இவர் கூறியதையே டிரம்பும் வழிமொழிந்துள்ளார். ஆனால், 'இது அதிகபட்சம் 78 ஆண்டு பிரச்னை தான். குறிப்பாக, 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தான் காஷ்மீர் பிரச்னை தோன்றியது. அதற்கு முன் பாகிஸ்தானே கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாக்கப்பட்டபோது, காஷ்மீர் மன்னர் ஹரிசிங்குக்கு எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதில் சிறிய குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் பாகிஸ்தான் அவரை மிரட்ட பயங்கரவாதிகளுடன் படையை ஏவியது. இதையடுத்து, இந்தியாவின் உதவியை நாடிய ஹரிசிங் அதே ஆண்டு அக்டோபரில் இந்தியாவுடன், காஷ்மீரை இணைத்துக் கொண்டார்' என கூறுகின்றனர், வரலாற்று அறிஞர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ramesh Sargam
மே 01, 2025 12:30

ட்ரம்ப் என்ன இந்தியா - பாக்கிஸ்தான் வரலாறு படிப்பில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் மாதிரி பேசுகிறார்.


SP
மே 01, 2025 12:27

அவர் உண்மையைத்தான் சொல்லி இருக்கின்றார்


SP
மே 01, 2025 12:26

சுல்தானியர்கள் தொடங்கி இன்று வரை சுமார் 1000 வருடங்களாக இந்துக்கள் அங்கே படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று தான் ட்ரம்ப் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளார் அதை தவறாக எல்லாருமே புரிந்து கொண்டிருக்கின்றார்கள் உதாரணத்திற்கு ராமர் கோயிலை எடுத்துக் கொள்ளலாம் 500 ஆண்டுகளாக அந்த பிரச்சனை இருக்கிறது. என்று சொன்னால் சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் தான்ஆகிறது என்று சொல்ல முடியுமா? அது போல தான் இதுவும்.


SANKAR
மே 01, 2025 12:47

very good and thanks SP for posting truth


sankaranarayanan
மே 01, 2025 11:57

இந்த ஆளுக்கு சரித்திரமும் தெரியாது அமெரிக்காவில் எத்தனை மாகாணங்கள் இருக்கின்றன என்றும் தெரியாது சும்மா சகட்டு மேனிக்கு வாய்க்கு வந்தபடிக்கு ஒரு நாளைக்கு கனடா 51வது மாகாணம் என்பார் இன்னொரு நாளைக்கு கிரீன்லாந்து 52-வது மாகாணம் என்பார் போகிற போக்கை பார்த்தால் இந்தியாவையும் ஒரு நாளைக்கு 53-வைத்து மாகாணம் என்று சொன்னால் கூட சொல்லுவார் அரசியல் பித்துக்குளி


SP
மே 01, 2025 11:28

தவறாக நினைக்க வேண்டாம் அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்


VSMani
மே 01, 2025 11:24

டிரம்ப் க்கு இந்திய அரசியல் நன்றாக தெரிய வாய்ப்பில்லை. நம்மவர்கள் அவருக்கு சரியாக எடுத்துரைக்க வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் மட்டும் காஷ்மீர் இணைப்பதில் பொறுப்பு ஏற்று இருந்தால் காஷ்மீரை கட்சிதமாக இந்தியாவுடன் இணைத்திருப்பார். நேரு செய்த தவறு இன்று வரை நாம் பல உயிர் தியாகம்களையும் கோடிக்கணக்கில் பணத்தையம் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.


Suresh Velan
மே 01, 2025 11:11

விவேக் படத்தில் வருகிற மாதிரி


swamy
மே 01, 2025 10:51

அவர் சரியா தாண் சொல்றார் ..... டுபாக்கூர்.


V RAMASWAMY
மே 01, 2025 08:45

Kashmir history is understood as under. It is Rishi Kashyaps Kashmira How this place got its name... Kashyaps Mira.. mira in Sanskrit means a huge lake, Sarovar. Rishi Kashyap is one of the Saptarishis...seven sages of the present Vaivasvata Manvantara. Those who belong to Kashyap Gotra are said to be the progenies of this rishi. Prajapati Daksha gave away thirteen of his daughters in marriage to Kashyap rishi. Devatas, Danavas, Yakshas, Nagas etc, all are progenies of Kashyap. There was a huge, beautiful lake amidst the Meru Parvat range. Lord Shiva along with his consort Sati were very attracted by the beauty of the lake and were the regular visitors to the lake. Kashyap presented this lake to Sati. The lake was then called Sati Sar. A demon called Jalodbhava started residing in the lake and started terrorising the people around the lake. People living in the vicinity went to Kashyap complaining and sought help. Kashyap called his Naga son Ananta naga to plan a strategy to eliminate Jalodbhava. They decided to empty the lake and expose the demon and asked Lord Vishnu to destroy him. Accordingly, a valley in the western side, called Varaha Mukh, presently Bara mullah was cut to let the lake water to drain off in to a land locked sea which then later called Kashyapas sea presently called Caspian sea. The demon then came out of the lake and Lord Vishnu killed him. Partly emptied lake was then developed into a learning center for study of holy ures, Vedas, upanishads. The place developed into a rich city of cultural heritage and thus named Srinagar. Anantnag, the Naga son of Kashyap built an other city in the neighborhood of Srinagar which is now a district Headquarter Anantnag. The entire Srinagar became very famous. Devi Gauri and Ganesh were the frequent visitors. The route through which they were using was known as "Gauri Marg"...the present day Gulmarg Based on Nilamata Purana, Kalhana wrote " Rajatarangini" which is an historical authority on Kashmir. All over the world the researchers on Kashmir use this great work as reference. The most simplified version of this book available in English is written by a British archeologist M A Stein. It is in three volumes.


Ranganathan
மே 01, 2025 09:35

We now know the correct historical back ground of Kashmir. Many thanks for correct illustration of past events.


skv srinivasankrishnaveni
மே 01, 2025 08:30

எங்கேருந்து வந்த கொள்ளையர்களேதான் முஸ்லிமதத்தினர் சாக்ஷி முகமது கோரி கஜனிமுகமது பிறகுவந்தான் பாபர் ஹுமாயுன் அவன் வமிசம்தான் நம்மளை அடிமை படுத்தினான் கட்டாயமாக மதமாற்றியவனுகளே என்றுமே இங்கே இந்தியாலே ஹிந்துக்கள் பௌத்தர்கள் ஜைனர்கள் சைவர்கள் வைணவர்கள் தான் இருந்தாங்க வரலாற்றை மாற்றியவனுகளே முஸ்லிம்களும் ஆங்கிலேய கிறிஸ்துதிரும்பும் வாளும்தான் .இந்திய சரித்திரம் trumbukku தெரியுமா வாயிலெவந்ததை ularindurukkaaru காஸ்மீரம் என்றே பெயர்பெற்ற பூமி பாகிஸ்தான் பிரிக்கவே காரணம் ஜின்னாதான் எல்லா முஸ்லிலிம்களுக்கும் ஆக்ரோஷம் அதிகம் இன்று இவர்களின் பாபுலேஷன் அதிகம் என்பதால் ஆனால் அவர்களுக்கு வறுமை zeero


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை