உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முழு சூரிய கிரகணம்: வட அமெரிக்காவில் தெரிந்தது

முழு சூரிய கிரகணம்: வட அமெரிக்காவில் தெரிந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது. அமெரிக்கா இருளில் மூழ்கியது.சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு, முதல் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம். அமெரிக்க நேரப்படி மதியம் 2.07 மணிக்கும், பின்னர் பிற்பகல் 3.20 மணிக்கும் கிரகணம் ஆரம்பமாகும். இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு நிகழத்துவங்கி முழு கிரகணமாக 10.08 மணிக்கு வரும். பிறகு அதிகாலை 1.25 மணிக்கு நிறைவடையும். இந்த கிரகணத்தின் கால அளவு 4 மணி 31 நிமிடங்களாக இருக்கும். இன்றைய முழு சூரிய கிரகணம் டெக்சாஸிலிருந்து மைனே வரையிலான 115 மைல் அகலப் பாதையில் முழு சூரியனையும் தடுக்கும், இது முழுமையின் பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வை டல்லாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட் மற்றும் நியூயார்க்கின் பஃபலோ ஆகிய நகரங்களில் அனுபவிக்கலாம்.ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் நாசாவின் சோலார் ஆர்பிட்டரும் கிரகணத்தை கண்காணிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Parthasarathy
ஏப் 08, 2024 23:51

வட அமெரிக்கா முழுவதிலும் முழு சூரிய கிரகணம் தெரியாது ஆனால் பகுதி நேரமாக தெரியும் நியூ ஜெர்சியில் % தெரியும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை