உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு மேலும் 25 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்

இந்தியாவுக்கு மேலும் 25 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் நமது பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கிவந்தது. இதனால், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவுடன் கூடுதலாக வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதலாக அபராதம் விதிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தார். முதலில் ஆக., 1 முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு பிறகு ஆக., 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று டிரம்ப் அளித்த பேட்டியில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அந்நாடு நிறுத்தாததால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த வரியை மேலும் கடுமையாக்க போவதாக வும் கூறியிருந்தார். இதன் மூலம் அடுத்த24 மணி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ளும்படி நெருக்கடி கொடுத்து இருந்தார்.இந்நிலையில், இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப்பட்ட வரி மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

montelukast sodium
ஆக 06, 2025 21:51

ரசியாவால் இந்திய மக்களுக்கு லாபமில்லை இந்திய அரசுக்கு லாபம் இருக்கோ இல்லியோ. குஜராத்திகளுக்கு லாபம் அமெரிக்காவில் 52 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்.. இதன் மூலம் இந்தியாவுக்கு டாலர் குவியுது.. ரசியாவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.. ஆகையால் ரசியாவா..? அமெரிக்காவா என்றால் அமெரிக்கா தான் முக்கியம்..


Saai Sundharamurthy AVK
ஆக 07, 2025 00:08

ரஷ்யாவின் உதவியால் தான் இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த மூன்று ஆண்டுகளாக லிட்டருக்கு 101 ரூபாய்க்கு மேல் ஏறவில்லை. ரஷியா மலிவு விலையில் நமக்கு எண்ணையை தந்திரா விட்டால் இந்நேரம் ஒரு லிட்டர் பெட்ரோல் 250 ரூபாய்க்கு மேல் எகிறி இருக்கும்.


Sudha
ஆக 06, 2025 21:38

இன்னும் 90 நாட்களில் ட்ரும்ப மண்ணாகிப்போவான். இது சத்தியம்


Ramesh Sargam
ஆக 06, 2025 21:27

இதற்கெல்லாம் டிரம்ப் கூடிய சீக்கிரம் பதில் சொல்லவேண்டிவரும்.


ஜெகதீசன்
ஆக 06, 2025 21:15

சூப்பர் கோமாளி. முந்தைய காலங்களில் அமெரிக்காவின் தடைகள் அதற்கு தோல்வியில் தான் முடிந்து இருக்கிறது.


beindian
ஆக 06, 2025 21:00

இன்றைய அமெரிக்காவின் நிலை - குரங்கு கையில் கிடைத்த பூ மாலை மாதிரி. பாவம் அமெரிக்க மக்கள்,


beindian
ஆக 07, 2025 09:41

இங்கே இந்தியாவில் உள்ளதைப்போல....


Asagh busagh
ஆக 06, 2025 20:51

டிரம்ப் யாரு எப்படிபட்ட ஆளுனு தெரியாமலே இந்திய பிரஜைகள் அவரை கொண்டாடினார்கள். புடினும் உத்தமன் கிடையாது. அனாவசியமில்லாத தனிமனித விருப்பத்துக்காக போர் நடத்துவது நியாயம் இல்லாத செயல். வெளியுறவு கொள்கையை சரியாக கணிக்காதலால் இரண்டு வித்தைகாரனுகளுக்கு இடையில மாட்டி முழிக்கும் நிலை. பந்தாவுக்காக நமக்கு நாமலே ஊதார் விடலாம், ஆனால் இந்த சிக்கலை தீர்க்கலனா பாதிப்பு நமக்கு தான். பணக்கார நாடான அமெரிக்காவுக்கோ, சீனாபக்கி கிட்ட விலை போன ரஷ்யாவுக்கோ இல்லை.


V K
ஆக 06, 2025 20:45

போப்பா எங்க ஊரில் டெஸ்லா காருக்கு நூர் சதவீதம் வரி அதை கட்டி வாங்கவில்லையா


V K
ஆக 06, 2025 20:42

இதனால் என்ன அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் என்ன அரிசி பருப்பு எண்ணெய் வாங்காமல் இருக்க போகிறார்களா இல்லையே


Jack
ஆக 06, 2025 20:42

நாமக்கல் முட்டை ஏற்றுமதி நின்றுவிட்டது ..ஆட்டோ ஸ்பேர்ஸ் ..திருப்பூர் ரெடிமேட் துணிகள் ஏற்றுமதி வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறார்கள் முதல்வர் ஒரு டிரில்லியன் கனவில் இருக்கிறார்


Sudha
ஆக 06, 2025 21:36

ராகுல் மட்டுமல்ல எத்தனை ஜாக் ஜில்லா இந்தியாவில் இருக்கிறார்கள், இவர்களை சேர்த்து 140 கோடி போல, இவர்களுக்கு இலவசங்கள், சலுகைகள் வேறு. கருமம்


Abdul Rahim
ஆக 06, 2025 20:39

கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல , அமெரிக்க மக்களே இவரை தூக்கி வீச போகிறார்கள் , இன்னமும் இந்த பெரியண்ணன் மனப்பான்மை அழிவைத்தான் தரும் இவரை கூட்டாளி என கொண்டாடியவர்களுக்கு இப்போதாவது புரிந்தால் சரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை