உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது துருக்கி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது துருக்கி

அங்காரா: காசா இனப்படுகொலையை முன் வைத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.இதற்கான அறிவிப்பை இஸ்தான்புல் தலைமை அரசு வக்கீல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், காசா இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகள் 37 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதிகாரிகளின் முழுமையான பட்டியலில் எந்த எந்த அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது, அவர்கள் என்ன பதவி வகிக்கின்றனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. கைது வாரண்ட் பற்றிய துருக்கியின் அறிவிப்புக்கு ஹமாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு மற்றும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் கடுமையான தமது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இது ஒரு விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் நாடகம் என்று விமர்சித்து உள்ளது. இதுகுறித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கியோடன் சார் தமது எக்ஸ் வலைதள பதிவில், எர்டோகனின் ஆட்சியில், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், மேயர்கள் ஆகியோரை மவுனமாக்குவதற்காக கையாளப்படும் ஒரு கருவியாக நீதித்துறை மாறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.காசா யுத்தத்தை எப்போதும் வெளிப்படையாக விமர்சிக்கும் முக்கிய நாடுகளில் துருக்கியும் ஒன்று. கடந்தாண்டு சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவின் வழக்கு ஒன்றில் இணைந்து, இஸ்ரேல் நடத்தியது இனப்படுகொலை என்று குற்றம்சாட்டி இருந்தது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

mummum
நவ 09, 2025 02:05

குர்தீஸ் இனம் அழிப்புன்னு எர்டோகனுக்கு இஸ்ரேல் கைது வாரனரட் பிறப்பிங்க


Pandi Muni
நவ 08, 2025 21:55

அதுக்கு வாரண்ட் ஒரு கேடு


RAJ
நவ 08, 2025 21:44

கைது வாரண்ட் எல்லாம் அதிகம்.


Nandakumar Naidu.
நவ 08, 2025 21:09

இஸ்ரேல் துருக்கி பிரதமருக்கு ஜாமீன் இல்லா கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 08, 2025 21:07

மோடி சார் இந்த துருக்கிக்கு ஓடி போயி உதவி செய்தார்


Perumal Pillai
நவ 08, 2025 20:23

Erdogan is an international terrorist.


RAJ
நவ 08, 2025 20:12

பிறப்பிச்சி ....கிழிக்கப்போறியா??? அவரை டச் பண்ணமுடியாதுனு உனக்கே தெரியும். எதுக்கு இந்த காமடி....


MUTHU
நவ 08, 2025 20:59

திராவிட காமெடியர்கள் மக்களை ஏமாற்ற சமூக நீதி மேடையில் பேசுவதில்லையா அதை போல் தான் துருக்கியும் தன் மத மக்களை ஏமாற்ற செய்யும் தந்திரம்.


Raman
நவ 08, 2025 19:42

Turkey is a third class, failed state.. naturally their partners are also in the same class..we must not have any dealing with this third class nation..


Field Marshal
நவ 08, 2025 19:24

துருக்கியில் ஆட்சி மாற்றம் நடை பெற வேண்டும்


பேசும் தமிழன்
நவ 08, 2025 19:22

அப்படியே துருக்கி ஆட்கள் இந்தியா வந்தால்...அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும்...... துருக்கி பாகிஸ்தான் நாட்டுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்...... தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் செயலை செய்து வருகிறார்கள்.... அதற்காக அந்த நாட்டை சேர்ந்த யாரையும் கைது செய்யலாம்.... அதுமட்டுமல்ல இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு துருக்கி நாட்டினர் தான் முக்கிய காரணம் !!!


MUTHU
நவ 08, 2025 19:39

மத்திய ஆசியா அமைதியின்மைக்கு துருக்கி கத்தார் ஈரான் மூன்று நாடுகள் மட்டுமே காரணம்.


புதிய வீடியோ