உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் தேர்தலில் வீசியது ஸ்டாமர் புயல்!: ரிஷி சுனக் கட்சி தோல்வி

பிரிட்டன் தேர்தலில் வீசியது ஸ்டாமர் புயல்!: ரிஷி சுனக் கட்சி தோல்வி

லண்டன்: நடந்து முடிந்த பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும், பழமைவாத கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமென்டுக்கான பொது தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இரவு 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பழமைவாத கட்சியின் ரிஷி சுனக், 44, தொழிலாளர் கட்சியின் கேர் ஸ்டாமர், 61, பிரதமர் வேட்பாளர்களாக களம் கண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1vjvhhgh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ராஜினாமா

தொழிலாளர் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்தது. மொத்தமுள்ள 650 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை. தொழிலாளர் கட்சி 412 இடங்களிலும், பழமைவாத கட்சி 121 இடங்களிலும் வெற்றி பெற்றன. வடக்கு பிரிட்டனின் ரிச்மண்ட் மற்றும் நார்த்தலர்டன் தொகுதியில் போட்டியிட்ட ரிஷி சுனக் 23,059 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், அவரது பழமைவாத கட்சி வரலாறு காணாத தோல்வி அடைந்தது. அவரது கட்சியை சேர்ந்த 250 எம்.பி.,க்கள் தோல்வியை தழுவினர்.முடிவுகள் வெளியான பின், மனைவி அக் ஷதா மூர்த்தியுடன் சென்று, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார் ரிஷி சுனக். அதன் பின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரிஷி சுனக் பேசுகையில், ''வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சிக்கும், கேர் ஸ்டாமருக்கும் வாழ்த்துகள். அவரை தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். ''ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நாட்டின் எதிர்காலம் சார்ந்து நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்,'' என்றார். பேச்சின் போது அவர் உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டார்.தொழிலாளர் கட்சியின் கேர் ஸ்டாமர், தன் மனைவி விக்டோரியா ஸ்டாமருடன் சென்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அதன் பின், பிரிட்டன் பிரதமராக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அப்போது ஆதரவாளர்கள் முன்னிலையில் ஸ்டாமர் பேசியதாவது: இந்த வெற்றியின் வாயிலாக, 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி புதிய எதிர்காலத்தை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுஉள்ளது. இந்த மாற்றத்தை நிகழ்த்தியது நாம் தான். இதற்காக நீங்கள் உழைத்தீர்கள், போராடினீர்கள், ஓட்டளித்தீர்கள். இப்போது மாற்றம் நிகழ்ந்துவிட்டது. நாட்டை மாற்றிவிட்டீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு நன்றி. கட்சியை மறுசீரமைக்க ஐந்து ஆண்டுகள் நாம் பாடுபட்டுள்ளோம்.

புதிய அத்தியாயம்

இந்த வெற்றியை நாம் கொண்டாட வேண்டிய நேரமிது. அதே நேரத்தில் நம் முன் சவால்கள் காத்திருக்கின்றன. நாட்டை புதுப்பிக்கும் பணி நம் முன் உள்ளது. பிரிட்டனை மீட்டெடுக்க நாம் தயாராக இருக்கிறோம். நாட்டின் மீதிருந்த ஒரு சுமை நீங்கிவிட்டது. ஆம், இறுதியாக அந்த சுமை நீக்கப்பட்டுவிட்டது.இந்த பெரிய தேசத்தின் புதிய விடியல் தற்போது தோன்றி இருக்கிறது. இனி நாம் நம்பிக்கையின் ஒளியுடன் நடக்கலாம். நாட்டு மக்கள் நமக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். இந்த ஆணை, ஒரு பெரிய பொறுப்பை நமக்கு அளித்துள்ளது. இன்று முதல் புதிய அத்தியாயத்தை துவங்குவோம். மாற்றத்திற்கான வேலையைத் துவங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

யார் இந்த கேர் ஸ்டாமர்?

கேர் ஸ்டாமர், 1962, செப்., 2ல், லண்டனின் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில், தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய் நர்சாக பணியாற்றினார். ஸ்டாமரின் தந்தை, தொழிலாளர் கட்சியின் தீவிர விசுவாசி. இதனால், தொழிலாளர் கட்சியின் முதல் பார்லிமென்ட் உறுப்பினரான கேர் ஹார்டியை நினைவுபடுத்தும் வகையில், தன் மகனுக்கு கேர் ஸ்டாமர் என பெயர் சூட்டினார். கேர் ஸ்டாமர், பள்ளிப் படிப்பு முடித்ததும், லீட்ஸ் பல்கலையில் சட்டம் பயின்றார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். கேர் ஸ்டாமர் அரசியலுக்கு வருவதற்கு முன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார். டோனி பிளேர் பிரதமராக இருந்தபோது பிரிட்டன் அரசு, ஈராக் மீது படையெடுத்ததை மிகக் கடுமையாக எதிர்த்தவர் ஸ்டாமர்.மேலும், 2003 முதல் 2008 வரை வடக்கு அயர்லாந்து போலீஸ் வாரியத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார். அதோடு, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இவரது சேவையைப் பாராட்டும் வகையில் கடந்த 2014ல், மறைந்த ராணி எலிசபெத் இவருக்கு, 'நைட்ஹுட்' பட்டம் அளித்து சிறப்பித்தார். இவர் திறமையான இசைக்கலைஞராகவும் அறியப்படுகிறார்.கடந்த 2015ல் இருந்து தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். உடனடியாக தொழிலாளர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. 2020ல் தொழிலாளர் கட்சியின் தலைவரானார். பொதுவாக தொழிலாளர் கட்சி மேலிடம், இடதுசாரி கொள்கை சார்ந்ததாக இருக்கும். கேர் ஸ்டாமரும் துவக்கத்தில் அப்படித் தான் இருந்தார்; பின், தற்போதைய சூழலுக்கு ஏற்ப, தன் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, நடுநிலைவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த தேர்தலின் போது, 'பிரிட்டனில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்' என்ற கோஷத்தை முன் வைத்து பிரசாரம் செய்தார்.காஷ்மீர் விவகாரத்தில் துவக்கத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். 'சர்வதேச நாடுகள் காஷ்மீர் விஷயத்தில் தலையிட வேண்டும்' என கூறி வந்தார். பின், பிரிட்டனில் அதிக அளவில் வசிக்கும் இந்தியர்கள், அவர்களது செல்வாக்கு, சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவின் வேகமான வளர்ச்சி போன்ற காரணங்களால், தன் நிலையை மாற்றிக் கொண்டார். 'காஷ்மீர் பிரச்னைக்கு, இந்தியா - பாக்., நாடுகள் சுமுகமாக பேசி தீர்வு காண வேண்டும்' என்றார். கேர் ஸ்டாமர் மனைவி விக்டோரியா, சுகாதாரத் துறையில் பணியாற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 10:27

121 இடங்களை பிடித்த ரிஷி தோல்வியை ஒப்புக் கொண்டு நாகரீகமாக ஒதுங்கி விட்டார். 543 இடங்களில் வெறும் 99 மட்டுமே வென்ற ராகுல் என்னவோ சாதித்த மாதிரி ஆட்டமா ஆடுகிறார். குறைகுடம் கூத்தாடும்.


அருண், சென்னை
ஜூலை 06, 2024 09:10

போக போக தெரியும்... விரைவில் வேற்று மதத்தவர்கள் ஆதிக்கம் இருக்கும்... கேர் ஹம்மர் hammer-ல் அவர்களை அடிப்பாரா அல்லது hammerல் அடிவாங்குவாரான்னு பொறுத்திருந்து பார்ப்போம்..


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 04:41

அடுத்த நாட்டு தேர்தல் நம்மை என்ன செய்யப்போகிறது என்று புரியாத உபிஸ் ஒரே ஒப்பாரி.


வல்லவன்
ஜூலை 05, 2024 23:21

சூடு சொரணை உள்ள ரிஷி ராஜினாமா செய்துவிட்டார்


sankaranarayanan
ஜூலை 05, 2024 20:22

இனி விடியல் தலைவர் சீக்கிரமே அங்கு சென்று ஆதரவு கொடுப்பாராம் நீட் தேர்வுக்கு அங்கேயும் ஆதரவு திரட்டுவாராம்


தமிழ்வேள்
ஜூலை 05, 2024 20:08

தேர்தலில் தோற்ற அண்ணாதுரை கொல்லைப்புற வழியாக எம்எல்சி ஆகித்தான் முதல்வர் ஆனார்..மோடிஜி மக்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கபட்டவர் .மண்மோகன் சிங் மாதிரி ராஜ்ய சபா எம்பி அல்ல..


Mohan
ஜூலை 05, 2024 18:55

எதற்கு இந்த விடியல் விசுவாசிகள் எந்த செய்திக்கும் பிரதமர் மோடியின் பெயரை இழுத்து வெறுப்பு நெருப்பை கக்குகிறார்கள்? ""முதல்வன்"" சினிமாவில் ரகுவரன் அர்ஜுனிடம் சொல்வார் - ""என்னை தவிர்க்கவே முடியலே இல்ல ?"" என நக்கலாக கேட்பார். மோடி அவர்களை எல்லா விஷயத்திலும் சிறுமை படுத்துவோர் அவரை "" தவிர்க்க முடியாமல்"" நொந்துதான் போயுள்ளனர்


Iniyan
ஜூலை 05, 2024 18:09

ஜிகாதிகள் தொழிலாளர் கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள். இனி பிரிட்டன் பயங்கரவாதிகளுக்கு பல்லக்கு தூக்கும்


Sivagiri
ஜூலை 05, 2024 17:57

பரவாஇல்ல . . . ரிஷீசுனாக் கூடுதல் இடம் கிடைச்சிருக்கு . .


Senthoora
ஜூலை 05, 2024 20:19

வரலாறு காணாத தோல்வியை அந்த கட்சிக்கும், இங்கிலாந்துக்கும் தேடி கொடுத்திருக்கிறார்.


RajK
ஜூலை 05, 2024 17:52

பொதுவான இங்கிலாந்து மக்களை விட ரிசி சுனக், இனத்தால் மதத்தால் மொழியால் வேறுபட்டவர். ஆகவே அங்குள்ள மக்கள் அவருக்கு எதிராக ஓட்டுப் போட்டிருக்க கூடும். தமிழ்நாட்டில் தான் இப்படி நடப்பதில்லை, நம்முடைய மொழி பேசுபவர் நம்முடைய மதத்தைச் சார்ந்தவர் நம்முடைய இனத்தைச் சார்ந்தவர் என்பது என்ற இயற்கையான உணர்ச்சிகளை முடக்கி வைத்து மூடர்கூடம் ஆக்கி உள்ளனர், தெலுங்கு பேசும், நம்நாட்டு மதங்களை காயப்படுத்தும் குடும்பத்தினர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை