உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் பங்களிப்பு உக்ரைன் அதிபர் நம்பிக்கை

இந்தியாவின் பங்களிப்பு உக்ரைன் அதிபர் நம்பிக்கை

கீவ்:ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பு உதவும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கி ழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இந்நிலையில், உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கும் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் வாழ்த்துகள் தெரிவித்தி ருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சமூக வலைதளத்தில் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைன் மீதான போரை, அமைதி பேச்சின் மூ லம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை உக்ரைன் வரவேற்கிறது. இந்த ராஜதந்திரத்தை வலுப் படுத்த எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் ஐரோப்பாவில் மட்டுமல்ல; இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலும், அதற் கு அப்பாலும் சிறந்த பாதுகா ப்புக்கு வழிவகுக்கும். ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இந்தியா பங்களிக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை