உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தலிபான் புதிய கட்டுப்பாடு பணியை நிறுத்தியது ஐ.நா.,

தலிபான் புதிய கட்டுப்பாடு பணியை நிறுத்தியது ஐ.நா.,

காபூல்: தெற்காசிய நாடான ஆ ப்கானிஸ்தானில், கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை பிடித்த பின், பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 2022-ல் தலிபான்கள் என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், ஆப்கானிஸ்தான் பெண்களை பணியமர்த்த தடை விதித்தனர். இந்த நடவடிக்கை, 2023-ல் ஐ.நா., அமைப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆப்கன் -- ஈரான் எல்லையில் இஸ்லாம் காலாவில் அமைந்துள்ள ஐ.நா., பணியகத்தில், பெண் ஊழியர்கள் பணியாற்றுவதையும் தலிபான்கள் தடை செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, ஐ.நா.,வும், அதனுடன் இணைந்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பணிகளை நிறுத்தியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை