உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடி, நிதீஷூக்கு அமெரிக்க பார்லி.யில் பாராட்டு

மோடி, நிதீஷூக்கு அமெரிக்க பார்லி.யில் பாராட்டு

வாஷிங்டன்: நாட்டின் பொருளாதாரத்திற்காக பல்வேறு துறைகளில் உள்கட்ட‌மைப்புப்பணிகளுக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்பதில் சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவர் என இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு அ‌மெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதியன்று அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸில் , சி.ஆர்.எஸ் என்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆய்வுக்குழு 94 பக்க அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது. இதில் இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நிர்வாகத்திறமையினையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில்துறையின் வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த அரசு நிர்வாகம் நடத்துகிறார் நரேந்திரமோடி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவரைத்தொடர்ந்து பீகார் முதல்வர் நிதீஷகுமாரின் நிர்வாகத்திறமையினையும் அக்குழு பாராட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை