உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு

சீன மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாவை அதிரடியாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீன மாணவர்கள் தான் அதிகம் பயின்று வருகின்றனர். கடந்த 2023-24ம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் சுமார் 2,70,000 சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர். அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 4ல் ஒரு பங்கு சீன மாணவர்கள் என்னும் அளவுக்கு எண்ணிக்கையில் உள்ளனர். இந்த சூழலில், ஹார்வர்டு பல்கலை நிர்வாகத்துடன் அதிபர் டிரம்ப்புக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கு வழங்கப்படும் நிதியை குறைத்த அவர், அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டையும் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்தார். இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறைகளை இன்னும் கடினமாக்க பரிசீலனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஹார்வர்டு பல்கலையின் ஆராய்ச்சி பணிகளில் சிலர், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சீன துணை ராணுவக் குழுவின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனடிப்படையில் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
மே 29, 2025 19:39

சீனாவுக்கு மாணவர்கள் அதிகம் படிக்கப் போய் தான் அங்கிருந்து சீனாவின் தொழில் நுட்பம் அதிகமாச்சு. போதாக்குறைக்கு பேராசை புடிச்ச அமெரிக்க கார்ப்பரேட்கள் எல்லா ஆலைகளையும் சீனாவுக்கு மாத்திட்டாங்க. அதற்கு தேவையான எல்லா மூலப் பொருட்களையும் நேரா சீனாவுக்கே போயிருச்சு. இன்னிக்கி அமெரிக்காவுக்கே செமிகண்டக்டருக்கான மூலப் பொருள்கள் கிடைப்பதில்லை. சப்ளை செயின் எல்லாம் சீனாவின் கட்டுப்பாட்டில். இந்தியா கடந்த 20 வருஷமாத்தான் மாணவர்களை அனுப்புது. தவிர மென்பொருள் தயாரிப்பு, மெயிண்டனன்ஸ் எல்லாம் இந்தியாவின் கண்ட்ரோலில். அதனால், சாஃப்ட்வேர் வேலைகளும் அமெரிக்காவில் காலி. நம்ம ஆளுங்க அங்கே போயி அவிங்க வேலையையும் எடுத்துக்கிட்டா ?


visu
மே 29, 2025 14:39

சும்மா இடம் கிடைத்ததே என்று ஏதாவது சொல்ல கூடாது எதேர்க்கு சீனா போய் அமெரிக்கர்கள் படிக்க போகிறார்கள்


Ramesh Sargam
மே 29, 2025 12:51

இது மிக மிக பெரிய தவறு. சீனாவை எங்களுக்கும் இந்தியாவுக்கும் பிடிக்காது. அதற்காக அங்கு படிக்கும் மாணவர்களுக்கு விசா ரத்து செய்து அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவது மிக மிக பெரிய தவறு. சீனாவில் படிக்கும் மற்றும் அங்கே வசிக்கும் அமெரிக்கர்களுக்கு சீன அரசு இப்படி செய்தால், அமேரிக்கா சும்மா இருக்குமா? உங்கள் அரசியலுக்காக படிக்கும் மாணவர்களை பழிவாங்காதீர்கள்.


Sekar
மே 29, 2025 10:16

சீனாவை தடை செய்ய அமெரிக்கா பயப்படுகிறது அதே சமயம் இந்தியாவை மிக கேவலமாக நடத்தி கொண்டிருக்கும் அமெரிக்கா. அவர்கள் தொழில் நுட்பத்திற்கு மாற்றாக இந்தியாவில் புதிய கண்டுபிடுப்புகள் வர வேண்டும். நாம் அமெரிக்காவை மிஞ்சிய நாடாக வேண்டுமென்றால் மிக பெரிய விலை கொடுக்க வேண்டும். மேலும் பல விஷயங்களில் சீர் திருத்தங்கள் கொண்டு வர படவேண்டும். சீனாவை போல் கட்டுமான திறன் மேம்பட வேண்டும். எல்லா தயாரிப்பிலும் தற்சார்பு நிலையை பெற வேண்டும். நமது மத்திய அரசு மிக சரியான இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் செயல் திறன் வேகமெடுக்க வேண்டும். வாழ்க பாரதம்.


Saai Sundharamurthy AVK
மே 29, 2025 08:27

ஏற்கனவே இந்த பல்கலைக்கழகம் கம்முனிஸ்டுகளின் கூடாரம் என்று பெயரெடுத்திருக்கிறது. இந்த அழகில் சீனாவுடன் வேறு தொடர்பில் இருக்கிறதா?? அதனால் தான் நம்ம ஊர் கம்முனிஸ்டுகள் சீன விசுவாசிகளாக இருக்கிறார்களா??


KavikumarRam
மே 29, 2025 09:59

சீன விசுவாசியா இருக்கிறத கூட மன்னிச்சிரலாம். ஆனா நம்ம பப்புவும் சீன அடிமைங்கிறது தான் கொடுமை.


சமீபத்திய செய்தி