மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
15 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
15 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
19 hour(s) ago
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ., வென்ற நிலையில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஜோபைடன் தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் பதிவேற்றியதாவது, தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் வெற்றியால் இந்திய -அமெரிக்க நாடுகளிடையேயான நட்புறவு மேலும் அதிகரிக்கும். இவ்வாறு ஜோபைடன் வாழ்த்தியுள்ளார்.பிரான்ஸ் அதிபர் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வாற்த்து தெரிவித்து உள்ளார்.. அவர் விடுத்துள்ள செய்தியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை இந்தியா நடத்தி முடித்து உள்ளது. மேலும் மோடி உடன் தான் எடுத்து கொண்ட செல்பி படத்தையும் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.மேலும் ரஷ்ய அதிபர் புடின் , யு.ஏ.இ. அதிபர் ஷே க் முகமது பின், மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் , வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.:பின்ன தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
15 hour(s) ago
15 hour(s) ago
19 hour(s) ago