உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாட்டையே சீரழித்தவர் டிரம்ப்; கமலா ஜெயித்தால் மூன்றாம் உலகப்போர்; அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல் விவாதம்!

நாட்டையே சீரழித்தவர் டிரம்ப்; கமலா ஜெயித்தால் மூன்றாம் உலகப்போர்; அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல் விவாதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: 'அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை. பொருளாதாரத்தை சீரழித்த அவர், மீண்டும் அதிபர் ஆனால், தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார்' என்று நேரடி விவாதத்தில் கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினார். பதிலுக்கு பேசிய டிரம்ப், 'அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் சென்றால், மூன்றாம் உலகப்போர் நிச்சயம் வரும்' என்றார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=04s1n9si&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

லட்சியம் இதுதான்; கமலா

இந்நிலையில் இருவரும் முதன்முறையாக இன்று (செப்.,11) பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி., செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின் போது இருவரும் தனது கருத்துகளை அள்ளி வீசினர்.அப்போது கமலா ஹாரிஸ் பேசியதாவது: நடுத்தர மக்களின் பொருளாதார மேம்பாடு எனது லட்சியம். மக்களுக்கான எந்த திட்டமும் டிரம்பிடம் இல்லை. டிரம்ப் அரசு பணக்காரர்களுக்கே வரி சலுகை கொடுத்தது. நடுத்தர மக்களை முன்னேற்றவில்லை. 21ம் நூற்றாண்டில் அமெரிக்கா தான் முன்னிலையில் இருக்கும்.

வர்த்தக போர்; கமலா

சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்ட டிரம்ப், அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார். சீனா அதிபருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். டிரம்ப் ஆட்சி காலத்தில் சுகாதாரமும் பொருளாதாரமும் மிக மோசமாக இருந்தது. சீனாவுக்கு அமெரிக்காவை டிரம்ப் விற்பனை செய்தார். அவர் சீனாவின் ஆயுத பலம் அதிகரிக்க உதவி செய்தார். அமெரிக்க பொருளாதாரத்தை சீரழித்தவர் டிரம்ப். அவரால் தான் வர்த்தக போர் ஏற்பட்டது.

கருக்கலைப்பு; கமலா கருத்து

டிரம்பால் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக, 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறக்கூடாது. ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை அரசு நிர்ணயிக்கக் கூடாது. டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையை கொண்டு வந்து விடுவார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம்.

சரியான தலைவர் தேவை: கமலா

நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்னைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளி தான்; அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால் அவர் மீது வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார்.

டிரம்ப் அதிபரால் தாங்காது: கமலா

அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்ப்-க்கு நம்பிக்கை இல்லை என்றும், இவர் மீண்டும் அதிபரானால் நாடு தாங்காது என்று இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார்; அனைவரையும் ஒன்றிணைக்கும் அதிபரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவர் பிரிக்கப் பார்க்கிறார். டிரம்ப் மீண்டும் மீண்டும் சட்டவிரோத குடியேற்றத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். வேறு எதையும் பேசுவதில்லை. நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்தை உயர்த்துதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

என் ஆட்சி தான் டாப்: டிரம்ப்

டொனால்டு டிரம்ப் பேசியதாவது: கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம்.பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்.

சட்டவிரோத குடியேற்றம்: டிரம்ப்

சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்க பைடன் ஆட்சி தான் காரணம். குற்றவாளிகள், தீவிரவாதிகள், கடத்தல்காரர்களை குடியேறிகளாக பைடன் ஆட்சி அனுமதிக்கிறது. நீதித்துறையை தனக்கு எதிராக ஏவி விட்டு அதிபர் தேர்தலில் வெல்ல நினைக்கிறார் அதிபர் ஜோ பைடன்.

கருக்கலைப்பு: டிரம்ப் கருத்து

கருக்கலைப்பு தொடர்பாக மிக ஆபத்தான கருத்துக்களை ஜனநாயக கட்சியினர் கூறினர். பைடன் ஆட்சியில் 9 மாதங்களிலும் கருக்கலைப்பு செய்ய அனுமதித்தனர். கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாகாணங்களில் இருக்க வேண்டும். கடந்த 52 ஆண்டுகளாகவே கருக்கலைப்பு பிரச்சினை ஒரு சிக்கலாக உள்ளது. செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. கருக்கலைப்புக்கு எதிரானது எனது நிலைப்பாடு; இருந்தாலும் மக்களின் கருத்துப்படி செயல்படுவேன்.

3ம் உலக போர்: டிரம்ப்

கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது.வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார். எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்.

வரிகளைக் குறைப்பேன்: டிரம்ப்

நான் வித்தியாசமான ஆள். சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை, படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள். இவ்வாறு டிரம்ப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
செப் 11, 2024 11:08

இஸ்லாத்துக்கும் உயிர்க்கொலையை கண்டிக்குது .... ஒரு உயிரைக்கொன்றவன் மனித குலத்தையே கொன்றவனாவான் என்று எங்க மறை சொல்லுது .... பைபிளும் கருக்கலைப்பை கண்டிக்குது ..... பெரிய பாவம் ன்னு சொல்லுது .....


தமிழ்வேள்
செப் 11, 2024 13:52

ஆபிரகாமிய மதங்களை பொறுத்தவரை , கருக்கலைப்பு மட்டுமே தவறு ..வளர்ந்த முழு மனிதனை மதத்தின் பெயரால் எப்படி வேண்டுமானாலும் , எத்தனைபேரை வேண்டுமானாலும் தயங்காமல் கொத்துக்கொத்தாக கொலை செய்யலாம் ..அது அனுமதிக்கப்பட்டது ..கொன்றவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும் ....கொடுமைடா சாமி ..


Barakat Ali
செப் 11, 2024 11:07

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம் .....


ram
செப் 11, 2024 10:53

கமலா கட்சி அமைதி ஆட்களுக்கு சப்போர்ட் செய்பவர்கள், இவர்கள் ஜெயித்தால் அங்கு பிரிட்டின் கதைதான் நடக்கும். இந்த கட்சி ஜெயிப்பது இந்தியாவுக்கு நல்லதுஅல்ல


nv
செப் 11, 2024 09:37

கமலா தனது வாதத்தில் Donald Trump ஐ கடித்து குதறி விட்டார். Trump வெறுமனே உளறல் மட்டுமே.. அனால் கமலா வருவது இந்தியாவுக்கு நல்லது அல்ல


புண்ணியகோடி
செப் 11, 2024 09:03

ரெண்டு பேருல யாரு ஜெயிச்சாலும் நமக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லை.


AMLA ASOKAN
செப் 11, 2024 08:54

ஒரு நாட்டின் தலைவர் அறிவு முதிர்ச்சி , சுயநலம் அற்ற தன்மை , கடினமாக உழைக்கக்கூடிய திறமை , மக்களை கவரும் அடக்கம், நளினம் , அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும் . இவை அனைத்தும் டிரம்ப்பிடம் துளியும் இல்லை . அவர் பேசுவது முழுவதும் வெறும் உளறல் . உலக அமைதியை கெடுக்கக்கூடிய நபர் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை