உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சக போட்டியாளரான விவேக்கை பொறிந்து தள்ளிய டொனால்டு டிரம்ப்

சக போட்டியாளரான விவேக்கை பொறிந்து தள்ளிய டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும் நடைமுறை இன்று துவங்குகிறது. இந்நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியை, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. முன்னதாக, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும், 'காகஸ்' எனப்படும் மாகாண அளவிலான உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். பாரம்பரியமாக, அயோவா மாகாணத்தில் இருந்து, இந்த தேர்தல் துவங்கும்.இந்தாண்டுக்கான காகஸ் தேர்தல், குடியரசு கட்சியில் இன்றும், ஆளும் ஜனநாயகக் கட்சியில் நாளையும் நடக்க உள்ளது. ஜனநாயகக் கட்சி யில், அதிபர் ஜோ பைடன் முக்கிய போட்டியாளராக உள்ளார். குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவரை எதிர்த்து, இந்திய வம்சாவளிகளான, ஐ.நா.,வுக்கான முன்னாள் துாதர் நிக்கி ஹாலே, தொழிலதிபரான விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களம் இறங்கியுள்ளனர்.இதுவரை நடந்து வந்த பிரசாரங்களின்போது, சக போட்டியாளர்களான டொனால்டு டிரம்பும், விவேக் ராமசாமியும், பரஸ்பரம் விமர்சிக்கவில்லை. அயோவா மாகாணத்தில் கட்சியின் பிரதிநிதிகள் ஓட்டளித்து தேர்ந்தெடுக்கும் காகஸ் நடக்க உள்ள நிலையில், 'டிரம்பை காப்பாற்றுங்கள்; விவேக்குக்கு ஓட்டளியுங்கள்' என்ற பிரசாரத்தில் விவேக் ராமசாமி தரப்பினர் ஈடுபட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,''விவேக் ராமசாமி பிரசாரத்தை நன்கு துவக்கினார். ஆனால், தற்போது கீழ்த்தரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாட்டின் மிகச் சிறந்த அதிபராக இருந்த நான், எந்த காலத்திலும் சிறப்பான அதிபராக இருப்பேன். ஆனால், விவேக்கால் அது முடியாது. அவருக்கு ஓட்டளிப்பது எதிர்தரப்புக்கு ஓட்டளிப்பதற்கு சமம்,'' என, கூறியுள்ளார்.இதைத் தவிர அவருடைய பிரசார குழுவினரும், விவேக் ராமசாமிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சண்முகம்
ஜன 15, 2024 20:11

இந்த ராமசாமி டிரம்ப்பு கால்ல விழுந்த கும்பிட்டாலும் இன வெறியன் டிரம்ப்பு இவனை மதிக்க மாட்டான். கறுப்பு இந்துவை வெள்ளை கிருத்தவன் மதிக்க மாட்டான். மதியார் வாசல் மிதியாதே என்பதை ராமசாமி அறியமாட்டார்.


வெகுளி
ஜன 15, 2024 08:34

அண்ணன் டிரம்ப் அவர்களின் துணை ஜனாதிபதியாக ஆகும் வாய்ப்பு விவேக் ராமசாமி அவர்களுக்கு உண்டு...


அப்புசாமி
ஜன 15, 2024 07:41

இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளராய் தேர்வு செய்யபட வேண்டுமென்ன்றால் மற்ற போட்டியாளர்கள் எல்லோரையும் தாக்கி எலிமினேட் செய்ய வேண்டும். பிக் பாஸ் போட்டியை விட கேவலமான போட்டி அது. ஜெயிச்சதுக்கப்புறம் நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதி ந்னு அடிச்சு உட்டு நல்ல பேர் வாங்கப் பாக்கணும்.


Bye Pass
ஜன 15, 2024 05:51

உக்ரேன் சண்டையும் இஸ்ரேல் சண்டையும் ட்ரம்ப் பதவிக்கு வந்தால் முடிவுக்கு வரும் . அகதிகளாக திருட்டு தனமாக நுழைவது குறையும் ..அமெரிக்க பொருளாதாரம் உயரும் ..பங்கு சந்தை உச்சத்தை தொடும் ..


மேலும் செய்திகள்









புதிய வீடியோ