உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா ஹனுமன் சிலை குறித்து அதிபர் ஆதரவாளர் சர்ச்சை

அமெரிக்கா ஹனுமன் சிலை குறித்து அதிபர் ஆதரவாளர் சர்ச்சை

நியூயார்க்: அமெரிக்காவில், ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் ஹனுமன் சிலை குறித்து டெக்சாஸ் குடியரசுக் கட்சித் தலைவர் ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சுகர்லேண்டில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவிலில், 90 அடி உயர ஹனுமன் சிலை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர் டங்கன் என்பவர், 'டெக்சாசில் பொய்யான ஹிந்துக் கடவுளின் ஒரு பொய்யான சிலையை ஏன் அனுமதிக்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
செப் 24, 2025 01:43

இலங்கை அரசன் ராவணனையே எதிர்த்து வெற்றிவாகை சூடிய அனுமனுக்கு இந்த பொடியன் அலெக்சாண்டர் டங்கன் எம்மாத்திரம்? ஜெய் அனுமான். ஜெய் ஸ்ரீ ராம். Does he know that America’s ex-President Mr ஒபாமா, who is a Christian by faith, always keep a small Hanuman Vikraham in his pocket for his protection from evils?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை