உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேடப்பட்டு வந்த பயங்கரவாதி மசூத் அசார்: கார் வெடித்து பலி?

தேடப்பட்டு வந்த பயங்கரவாதி மசூத் அசார்: கார் வெடித்து பலி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பவல்பூர்: ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மவுலானா மசூத் அசார், வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கடந்த 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் 2019ம் ஆண்டு பிப்.,14ல் நடந்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார். கடந்த மே 1ல் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்தது.சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மசூத் அசார், இன்று (ஜன.,1) காலையில் கார் வெடித்ததில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் பவல்பூர் மசூதியிலிருந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் மசூத் அசார் காரில் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அப்போது கார் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் மவுலானா மசூத் அசார் உள்ளிட்ட அனைவரும் உடல் சிதறி பலியானதாகவும், இதனையடுத்து அங்கு சென்ற பாகிஸ்தான் போலீசார், அப்பகுதியை சீல் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

MARUTHU PANDIAR
ஜன 03, 2024 19:24

காட்டுமிராண்டிகள் இப்படியே ஒவ்வொருத்தரா ஒழிஞ்சா உலகத்துக்கே விமோசனம்+==அவனுவ திருந்த மாட்டானுவ, அதற்கு வாய்ப்பே கிடையாது.அவுங்க அஜெண்டா அப்படி.


M Ramachandran
ஜன 03, 2024 17:02

விரோதிகள் எந்த மூலை முடிக்கில் யார் அக்குள் கீழ் ஒளிந்து கொண்டாலும் விட போவதில்லை


D.Ambujavalli
ஜன 02, 2024 06:31

நிஜமாகவே. அவன்தானா அல்லது. பிரசனையிலிருந்து தப்பிக்க பிராக்சி ஏற்பாடா என்பதுவும் ஆராயப்பட வேண்டும்


ரமேஷ்VPT
ஜன 02, 2024 04:29

தீவிரவாதத்தை போற்றி வளர்த்தது பாகிஸ்தான் தான் தான். இப்பொழுது அவர்களே தீவிரவாதிகளை கொல்லவேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டனர் போலும். இது உண்மை தானா என்று உறுதியாக தெரியவில்லை.


Kasimani Baskaran
ஜன 02, 2024 00:52

எங்கள் குலதம்பிரான் தோவலை பாராட்டுகிறேன்... மர்ம மனிதர்களுக்கும் கூட பாரத இரத்தினா கொடுத்தாலும் தப்பில்லை...


Ramesh Sargam
ஜன 02, 2024 00:48

புதிய ஆங்கிலேயே வருடம் இனிதே துவங்கியது. ஸ்வீட் எடு. கொண்டாடு. ஆனால் ஒரு சில தேச துரோக இந்திய அரசியல்வாதிகளுக்கு இது சோகமான செய்தி. அவர்கள் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பின் தலைவன் இறந்துவிட்ட துயரத்தில் அவர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.


Loganathan Kuttuva
ஜன 01, 2024 22:56

பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இருந்து விடுபட்டிருக்கும்


NicoleThomson
ஜன 01, 2024 22:45

பாகிஸ்தான் இப்படி சொல்லியிருக்கு என்றால் வேறு ஏதோ நாடகம் ஆடுகிறது , ஒசாமா விஷயத்திலும் அவன் செத்துவிட்டான் என்று இரண்டு முறை சொல்லியிருந்தது , பாகிஸ்தானியர்கள் பிறப்பே அவர்களின் நடத்தையில் பிரதிபலிக்கும்


Marai Nayagan
ஜன 01, 2024 22:04

தெய்வம் நின்று கொல்லும்...ரா...ரா...ராம்...ஹரே


Bhaskar Srinivasan
ஜன 01, 2024 21:07

24 வருடம் கழித்து திருமதி ரச்னா கடியாலின் சாபம் பலித்தது, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தண்டனை கிடைத்துள்ளது மகிழிச்சி


மேலும் செய்திகள்







புதிய வீடியோ