உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடி வங்கதேச யூனுஸிடம் சொன்ன தகவல்!

பிரதமர் மோடி வங்கதேச யூனுஸிடம் சொன்ன தகவல்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், வங்கதேச தலைவர் முகமது யூனுைஸ, நம் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கிறார்; இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக யூனுஸ் உள்ளிட்ட வங்கதேச ஆளும் தரப்பினரின் அர்த்தமில்லா குற்றச்சாட்டுகள், இருதரப்பு உறவுகளைக் கெடுப்பதற்கே உதவும் என்று பொருள்படும்படி, வெளிப்படையாகவே யூனுஸிடம் பேசிவிட்டார் மோடி.வங்கதேசத்தில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, முற்போக்கான ஜனநாயக ஆட்சி அமைப்பையே இந்தியா விரும்புகிறது என்பதை வலியுறுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான செயல்படுத்தக் கூடிய உறவை விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும் கவலை தெரிவித்திருக்கிறார். 1971க்குப் பின், இந்த அளவுக்கு ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடந்ததில்லை; இந்திய வலியுறுத்தலையும் தாண்டி தாக்குதல் தொடர்கிறது.வங்கதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ேஷக் ஹசினாவை, மக்கள் போராட்டம் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் விரட்டியடித்ததை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.இந்தியாவில் தஞ்சம் அடைந்த அவரை, வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பி, அங்கு குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும் என்பது, யூனுஸ் அரசின் திட்டம். அதை அவர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.வங்கதேசம் உருவாக, ராணுவம் உட்பட அனைத்து உதவிகளையும் இந்தியா செய்தது. ஆனாலும், ஹசீனாவின் தந்தையும், வங்கதேச தந்தை என்று அறியப்பட்டவருமான முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்குப் பின், அந்நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை தோன்றியது. இடைப்பட்ட காலத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது அதே நிலை மீண்டும் உருவாகி விடுமோ என்பது நம் கவலை. அப்படி ஒரு நிலை உருவானால், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதம் அங்கு மீண்டும் தலைதுாக்கும்; ஆட்சியாளர்களும் அதற்கு ஆதரவுக்கரம் நீட்டுவரோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.மேலும் அங்கிருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; அங்கு தீவிரவாதம் தலைவிரிக்கத் துவங்கியதும், பாதுகாப்பான நாடு இல்லை இது என்று கருதி, ஏராளமானோர் இந்தியாவில் தஞ்சம் அடைவர்; அதைத் தடுத்து நிறுத்துவது, மனிதாபிமானம் அற்ற செயலாக பார்க்கப்படும். உலக அரங்கில் மோடி பெற்றிருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்.

ஏழு சகோதரிகள்

நம் பிரதமரை தாய்லாந்தில் சந்திப்பதற்கு முன், சீன அதிபர் ஜின்பிங்குடன் அந்நாட்டில், யூனுஸ் பேச்சு நடத்தினார்; இடையில், ஒரு அறிக்கை வாயிலாக இந்தியாவை கொச்சைப்படுத்தினார்.சமீபத்தில், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஏழு சகோதரிகள் என்று அறியப்படும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வெளியுலக தொடர்பிற்கு, வங்கதேச கடற்பகுதியை சார்ந்துள்ளன என்று யூனுஸ் பேசியது, ரசிக்கும்படியாக இல்லை. அதாவது, வங்கதேசத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு சீனா பெரிய அளவில் உதவுமேயானால், அது இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடாக இருக்கும்; அதற்கு வங்கதேசம் ஆதரவு தரும் என்பதே இதன் பொருள். மேலும், வங்கதேசத்தில் ஒரு விமான தளத்தை சீனா உருவாக்க வேண்டும் என்றும், அதற்கான பணிகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் யூனுஸ் அறிவித்தார்.அது, ஹசீனா காலத்தில் இந்தியாவின் பங்களிப்போடு, ரஷ்யா நிறுவத் துவங்கிய அணுமின் நிலையத்திற்குப் போட்டியாக, சீனா - பாகிஸ்தான் கூட்டணியில் ஒன்றை உருவாக்க அவர் விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது.இத்தகைய பின்னணியில், யூனுைஸ, பிரதமர் மோடி சந்தித்ததே பெரிய விஷயம். 'இந்தியாவின் உதவி வங்கதேசத்திற்குத் தேவைப்பட்டால், அந்நாடு இந்தியா குறித்த ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்' என்பதே பிரதமர், யூனுஸுக்கு கொடுத்த தகவல்!எஸ்.நாராயணன்பத்திரிகையாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram Moorthy
ஏப் 08, 2025 14:32

நமது பிரதமர் என்ன பேசினார் என்று தகவல்கள் செய்தியில் மிக குறைவு சைனா ஆக்கிரமிப்பில் பாக், சிலோன், மால்த்தீவு, பல ஆப்பிரிக்க நாடுகள் அடைந்த வளர்ச்சியை விட இழந்தது தான் மிக அதிகம்


Mr Krish Tamilnadu
ஏப் 05, 2025 20:45

பக்கத்து வீட்டுகாரன் அப்படினு பக்குவமாக சொன்ன?. பாகிஸ்தான் னை திரும்ப அழைத்தால், வங்கதேசம் நமது அங்கம் என மூளை சலவை செய்த ஆள்களை கொண்டு வந்து இறக்கி விடுவான். ஜாக்கிரதை. கிழக்கு ஆசியா செழுமைக்காக ஏங்குகிறது, பாக். மதக்கொள்கையை தூக்கி பிடிக்கும் நாடுகள், மக்கள் கொள்கையில் சறுக்கி விடுகின்றனர். காரணம் மதம் அல்ல, அதற்கு இதற்கு பாலத்தை அமைக்க முடியாமல் அந்த தலைவர்கள் தடுமாறுவதே காரணம். என தெளிவாக சொல்லி விட்டீர்களா மோடி அவர்களே.


venugopal s
ஏப் 05, 2025 13:17

அந்தப் பக்கம் நான் வர மாட்டேன் இந்தப் பக்கம் நீ வரக்கூடாது, பேச்சு பேச்சாத் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பாரோ?


S.L.Narasimman
ஏப் 05, 2025 07:45

இவெங்களுக்கெல்லாம் கடுமையான எச்சரிக்கை விடுவதுடன் உடன் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை