உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராமர் கோயில் கும்பாபிஷேகம் கொண்டாட்டம்: அமெரிக்காவில் 216 கார்களில் பேரணியாக சென்ற ஹிந்துக்கள்

ராமர் கோயில் கும்பாபிஷேகம் கொண்டாட்டம்: அமெரிக்காவில் 216 கார்களில் பேரணியாக சென்ற ஹிந்துக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹியூஸ்டன்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் ஹிந்து மதத்தினர் சார்பில் 216 கார்களில் பேரணியாக சென்றனர்.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இதனால் அயோத்தி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இப்போதே ஹிந்துக்கள் கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.இந்த கொண்டாட்டம் தற்போது அமெரிக்காவிலும் களைகட்ட துவங்கியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் ஹிந்து மதத்தினர் சார்பில் 216 கார்களில் இந்தியா தேசியக்கொடி, அமெரிக்கா கொடி மற்றும் காவிக் கொடிகளுடன் ‛ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் எழுப்பியவாறு பேரணியாக சென்றுள்ளனர். ஹியூஸ்டனில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கோயிலில் துவங்கிய பேரணி 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து செல்லும் வழியில் உள்ள 11 கோயில்களை கடந்து ரிட்ச்மவுண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதாம்பா கோயிலில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Arun
ஜன 10, 2024 16:11

வேலை வாய்ப்பு அங்கேயும் குறைந்து விட்டதோ....


Damodara Ramanuja Dasan
ஜன 10, 2024 10:28

இந்து மதத்தின் பெருமையை உலகம் நன்கு உணர ஆரம்பித்துள்ளது.


J.Isaac
ஜன 10, 2024 08:07

கோவில்களை கட்டி கண்களை திறந்து பார்த்து விட்டால் போதாது நல்ல புத்தி வர வேண்டும்.


Ramesh Sargam
ஜன 10, 2024 01:07

மீண்டும் மோடி ஆட்சியில் அமரவேண்டும். மீண்டும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் எதிரி நாட்டினர் நம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹிந்து கோவில் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு அயோத்தி போல் கோவில்கள் வரவேண்டும்.


vaiko
ஜன 10, 2024 01:06

போன இடத்தில பொத்திக்கொண்டு இருக்காமல், ஆட்டம் போட்டால் ஒரு நாள் முதுகில் டின் கட்டத்தான் போகிறார்கள்.


Arul Narayanan
ஜன 09, 2024 18:24

தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்காது.


ராமகிருஷ்ணன்
ஜன 09, 2024 14:35

அமெரிக்காவில் உள்ள இந்து உணர்வு தமிழகத்தில் ஏன் இல்லை. இந்துமத விரோதிகளை ஒழிக்க வேண்டும். தேர்தல்களில் சிந்தித்து ஓட்டளிக்க வேனும்.


Sivakumar
ஜன 09, 2024 15:35

இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் இருக்கும் தமிழ் இன உணர்வு தமிழகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு இருப்பதில்லை. அச்சுறுத்தப்பட்டவர்களுக்கும் அந்த உணர்வு அதிகம். உங்கள் அவசியமில்லா அவசரமும் புரிகிறது.


Pavithra
ஜன 09, 2024 15:56

மத உணர்வு அவிங்களுக்குள்ள இருந்தா போதுமே. எதுக்கு இந்த தேவையில்லாத எடுப்பு. வண்டி எடுனு கெளம்பிட்டா அப்ரம் எல்லா ஊரும் பெங்களூரு மாதிரி Traffic Jam தான்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ