UPDATED : ஆக 23, 2024 06:07 PM | ADDED : ஆக 23, 2024 05:29 PM
வாஷிங்டன்: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் சில நாட்கள் நிச்சயமற்ற தன்மையில் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என நாசா கூறியுள்ளது.இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(58), புட்ச் வில்மோர்(61) ஆகியோர் கடந்த ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரச்னைய சரி செய்தாலும், அந்த விண்கலத்தை பூமிக்கு வெற்றிகரமாக கொண்டு வர முடியுமா என நாசா விஞ்ஞானிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் நாசா வெளியிட்ட அறிக்கையில், '' விண்வெளி வீரர்களுடன் ஸ்டார்லைனரை பூமிக்கு கொண்டு வருவது குறித்து நாசாவின் முடிவை ஆக.,24க்கு முன்னர் எதிர்பார்க்க முடியாது. இன்னும் சில நாட்கள் அவர்கள் நிச்சயமற்ற நிலையிலேயே விண்வெளியில் தங்கியிருக்க வேண்டும்.'' எனக்கூறியுள்ளது.