உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போர் நிறுத்தம் எப்போது: புடின் உடன் போனில் பேசினார் டிரம்ப்

உக்ரைன் போர் நிறுத்தம் எப்போது: புடின் உடன் போனில் பேசினார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரி்க்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இருவரும் போனில் பேச்சு நடத்தினர்.அமெரிக்க அதிபராக பைடன் இருந்தவரை, ரஷ்யா உடன் எந்த உறவும் இல்லாத நிலை இருந்தது. அந்த அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமான நிலையை எட்டி இருந்தது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பதவிக்கு வந்த அதிபர் டிரம்ப், முந்தைய அதிபரின் கொள்கைகளை கைவிட்டு, ரஷ்யா உடன் பேச்சு நடத்த தொடங்கிவிட்டார். பதவியேற்ற நாள் முதலே உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவேன் என்று டிரம்ப் கூறி வருகிறார். அதன்படி ஏற்கனவே ஒரு முறை ரஷ்ய அதிபர் புடின் உடன் போனில் பேசி இருந்தார்.இன்று இரண்டாம் முறையாக இரு நாட்டு அதிபர்களும் போனில் பேச்சு நடத்தினர்.கடந்த வாரம், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில் சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உக்ரைன் அதிகாரிகள் அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளுக்கு ஒப்புக்கொண்டனர்.இது பற்றி ரஷ்ய அதிபருடன் டிரம்ப் பேசி போர் நிறுத்தத்துக்கு வழிவகை செய்வார் என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். பேச்சு வார்த்தை குறித்து, இரு நாட்டு அரசுகள் தரப்பிலும் விரிவான அறிக்கைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M R Radha
மார் 19, 2025 07:45

சர்வாதிகாரி ஊழல்வாதி நாசகாரப்பாவி பிரபாகரனை ஒழித்தது போல் ஸிலின்ஸ்கியை ஒழித்துக் கட்டுங்கள் உக்ரைனை காப்பாற்றுங்க மக்களை வாழ்வைங்க.


Appa V
மார் 18, 2025 22:39

ராகு காலம் எமகண்டம் பார்த்து நேரம் முடிவு பண்ணுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை