உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரத்தக்கறையுடன் தம்ப் காட்டிய டிரம்ப்

ரத்தக்கறையுடன் தம்ப் காட்டிய டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பை சுட்ட நபர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, தனி விமானம் மூலம் நியூஜெர்சி வந்தடைந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k9hpr5tw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சுட்டவர் அடையாளம் தெரிந்தது

இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞர் . 20 வயது மதிக்கத்தக்கவர். டிரம்ப் இருந்த மேடையில் இருந்து சற்று தொலைவில் கட்டடம் ஒன்றின் மேற்கூரையில் இருந்து சுட்டுள்ளார். குறி தப்பியதால் குண்டு டிரம்ப் காதை உரசி சென்றது. இதனை உணர்ந்து டிரம்ப் உடனடியாக கீழே அமர்ந்து குனிந்து கொண்டார். பாதுகாப்பு அதிகாரிகளும் அவரை சுற்றி சூழ்ந்து பாதிப்பு ஏற்படாமல் காத்தனர். இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பென்சில்வேனியாவை சேர்ந்தவர்

உற்சாகம்

தாக்குதல் நடந்த போது நிலை குலையாமல், ரத்தம் சொட்டும் நிலையிலும் ஆதரவாளர்களை நோக்கி கையை உயர்த்தி ‛தம்ப்' சின்னத்தை காட்டி, உற்சாகமாக கோஷம் எழுப்பியவாறு மருத்துவமனைக்கு சென்றார். சுற்றி இருந்தவர்களும் ஆதரவு குரல் எழுப்பினர்.

சமூக வலைதளங்களில் வைரல்

இந்தச் சம்பவம் குறித்து தகவல் வெளியானதும் சமூக வலைதளங்களில் டிரம்ப் குறித்த ஹேஷ்டேக் வைரல் ஆனது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே உள்ளிட்ட உலக தலைவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களை எடுத்துக்கூறி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை விமர்சிக்கின்றனர். பிரசார கூட்டத்தில் இருந்தவர்கள் அளித்த பேட்டி, ரத்தக்காயத்துடன் இருக்கும் டிரம்ப் குறித்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால், எக்ஸ் வலைதளத்தில் ‛ Trump, PresidentTrump, Shooter' ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்தன.

உலகளவில்

டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு செய்தியே உலகளவில் பேசுபொருளாக உள்ளது. அனைத்து ஊடகங்களும் இது குறித்தே தலைப்பு செய்தியாக வெளியாகியது. சம்பவம் நிகழ்ந்தது எப்படி, டிரம்ப் பாதுகாப்பு, அமெரிக்க உளவு அமைப்பான எப்பிஐ பேட்டி, இதற்கு முன்னர் துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளான அமெரிக்க தலைவர்கள் யார் யார்? உள்ளிட்ட விஷயங்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

mindum vasantham
ஜூலை 14, 2024 19:05

டிரம்ப் என்பவர் மாவீரர் deep state என்று உலகை கட்டுப்படுத்தும் கொடிய அமைப்பு அவரை எதிர்க்கிறது


visu
ஜூலை 14, 2024 15:16

ஹ்ம்ம் பைடேன் கடந்த முறையே தீட்டு தடுமாறி வென்றார் டிரம்ப் வழக்கமான அரசியல்வாதி போல் இன்றி சாதாரன மனிதன் தேவைக்கேற்ப அமெரிக்க தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கிறார் இது பைடேன் போன்றவர்களுக்கு சிரமம் அவரை போட்டியிட விடாமல் தடுக்க பல வழக்குகள் எல்லாவற்றையும் தாண்டி வருகிறார் . இதே நம்ம ஊர்ல நடந்தால் ஜநாயக படுகொலை என்பார்கள்


Jysenn
ஜூலை 14, 2024 14:01

Trump could have shouted " Kolraanga Kolraanga Kolraanga " but as one hailing from a decent family he has conducted himself excellently well in the face of grave danger to his life.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 14, 2024 12:52

எங்கள் தமிழினத் தலைவர்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 14, 2024 12:50

எதுக்கு தம்ப் காட்டுறாரு ?? ??? மர்ம நபர் ன்னா யாரு ?? அவங்களா ??


Palanisamy Sekar
ஜூலை 14, 2024 12:36

ட்ரம்பின் வெற்றிக்கு இந்த துப்பாக்கி சூடு முயற்சி வெற்றியை தந்துவிடும். ட்ரம்பின் வெற்றியை தடுக்க ட்ரம்பையே இல்லாமல் செய்திடலாம் என்று எண்ணிய நாடுகளில் ஏதாவது ஒரு நாடு இதனை செய்திருக்க வாய்ப்பு உண்டுதான். மறுப்பதற்கில்லை. ட்ரம்ப் அவர்களே அதனை இன்னும் சில நாட்களில் தனது சந்தேகத்திற்குரிய நாடுகளை பற்றி சொல்லிடுவார். திட்டமிடுதல் என்பது கொலை முயற்சிக்கான ஒத்திகை தான். ட்ரம்பிற்கு உரிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அல்லது தொழிற்போட்டி காரணமாக இதனை செய்திருக்கலாம் என்று கூட சந்தேகத்தை கிளம்புவார்கள். சுட்டுகொன்றுவிட்டதால் தடயமே இல்லாமல் போய்விடாது. நிச்சயம் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து விடுவார்கள். கோழைகளின் செயல்களின் ஆரம்பமே கொன்று விடுதல் என்றிருப்பதால் நிச்சயம் சம்பந்தப்பட்ட நபரை அதாவது ஏவி விட்ட சதிகாரர்களை கண்டுபிடித்து விடுவார்கள்.


பாலகிருஷ்ணன்,இரணியல்
ஜூலை 14, 2024 19:34

ஏலே பழனி இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற? சும்மா வழ வழா கொழ கொழான்னு...


ديفيد رافائيل
ஜூலை 14, 2024 11:54

மக்களின் அனுதாப ஓட்டு வாங்க இவரே ஆள் set பண்ணி கூட பண்ணியிருக்கலாம்.


Sakthi,sivagangai
ஜூலை 14, 2024 13:37

ஓங்கோல் புத்தி உன்னை விட்டு போகலை மண்டை மண்ணுக்குள் போற வரை அதை மாற்ற முடியாது.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ