உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியர்கள் ஓட்டு யாருக்கு ? அமெரிக்க அதிபர் தேர்தலில் " கார்டு" யார் கையில் ?

இந்தியர்கள் ஓட்டு யாருக்கு ? அமெரிக்க அதிபர் தேர்தலில் " கார்டு" யார் கையில் ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தியர்கள் ஓட்டுக்கள் மிக முக்கியம் வாய்ந்தது என்பதை அமெரிக்க முக்கிய அரசியல் கட்சிகள் உணர துவங்கி உள்ளன. இந்தியர்கள் ஓட்டு வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பலமாக எழுந்துள்ளது.அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கமலாஹாரீஸ் (ஜனநாயக கட்சி) , டொனல்டு டிரம்ப் (குடியரசுகட்சி) . இருவரில் யாருக்கு அதிகம் செல்வாக்கு உள்ளது என்ற பேச்சு தற்போது தலைதூக்கி உள்ளது. காரணம் அமெரிக்க நிர்வாகம், பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சி குற்றம் சாட்டுகிறது. இந்த தருணத்தில்தான் அதிபர் ஜோபைடன் விலக்கப்பட்டு கட்சி சார்பில் ஒருமித்த கருத்துடன் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளரானார். இது ஜனநாயக கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு கட்சிக்கு உத்வேகம் தந்துள்ளது.

வலுவிழந்த துப்பாக்கி சப்தம் !

டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதராக இருப்பார். இவரால் நல்ல நிர்வாகத்தை தரமுடியாது என்கிறது ஆளும் கட்சி. இதற்கிடையில் கடந்த மாதத்தில் பிரசாரத்தின்போது டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காதில் லேசான ரத்தகாயத்துடன் நூலிலையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் டிரம்ப்பே அதிபர் ஆவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது போல் தற்போது இது எடுபடவில்லை.

கமலாவுக்கே இந்தியர்கள் ஓட்டு

இதற்கும் மேலாக தற்போது அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஓட்டு யாருக்கு மொத்தமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளி என்பதால் இவருக்கே ஓட்டளிக்க வேண்டும் என சில இந்திய அமைப்பினர் குரல் எழுப்ப துவங்கி உள்ளனர். பல இந்தியர்கள் மற்றும் பல ஹிந்து அமைப்புகளும், அமெரிக்க தேர்தலுக்கு சில அமைப்புகள் மூலம் ஓட்டுக்களை கவர முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த அமைப்புகள் பெரும்பாலும் கமலா ஹாரீசுக்கே ஆதரவுக்கரம் நீட்டுகிறது. கமலா ஹாரீஸ் அதிபரானால், இந்திய - அமெரிக்க உறவு மேம்படும் என பேசப்படுகிறது. இதனால் இந்தியர்கள் கமலாவுக்கே ஓட்டளிக்க வேண்டும் என்ற குரலும் மேலோங்கி ஒலிக்கிறது.தற்போது இந்தியா , மற்றும் இந்திய புலம் பெயர்ந்தோர் சார்ந்த ஒரு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒரு லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் ஒருங்கிணைந்த பிரசாரம் மேற்கொள்வது , இந்திய அமெரிக்கர்களின் ஓட்டு முக்கியத்துவத்தை உணர்த்துவது என பல யூகங்கள் வகுத்துள்ளன. அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளாக ஜனநாயககட்சி, குடியரசு கட்சிகள் மத்தியில் இந்தியர்கள் ஓட்டுக்கள் பலத்தை எடுத்து செல்வது என திட்டம் தீட்டி உள்ளனர். அமெரிக்க மொத்த மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் 1.5 சதவீதம் பேர் உள்ளனர். தற்போது ஏறக்குறைய 40 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளனர். இவர்கள் ஓட்டு எந்த வேட்பாளருக்கு மொத்தமாக கிடைக்கிறதோ அந்த அடிப்படையில் வெற்றி, தோல்வி நிகழும் என நம்பப்படுகிறது. கமலாவா, டிரம்பா ? கார்டு இந்தியர்கள் கையில் !

இது ஹைலைட் !

பிரபல அமெரிக்க தேர்தல் கணிப்பாளரான ஆலன் லிட்ச்மேன் சமீபத்திய ஒரு பேட்டியில் அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலாஹாரீசுக்கே அதிகம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். டிரம்பை தோற்கடிப்பார் என்கிறார். இவர் இதற்கு முன் நடந்த அமெரிக்க 10 தேர்தல்கள் முடிவை துல்லியமாக கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சண்முகம்
செப் 08, 2024 00:04

யார் வந்தாலும் இந்தியாவிற்கு பலன் கிடையாது. இந்தியா வல்லரசானால், தானாக இருவரும் ஓடி வருவார்கள்.


Oru Indiyan
செப் 07, 2024 19:35

தயவுசெய்து கமலாவுக்கு வாக்கு அளிக்காதீர்கள். அவர் ஒரு ஹிந்து எதிரி


Jagan (Proud Sangi)
செப் 07, 2024 19:24

இந்தியாவில் நாம் ஒன்று விருப்புகிறோம். என் அமெரிக்க ப்ராஜெக்ட் மேனேஜர் வெள்ளக்காரன் கமலா ஜெயிப்பது நிச்சம் என்று சொல்கிறார். அவர் தான் என்னவோ டிரம்புக்கு தான் வோட்டு போடுவேன் அனால் நிச்சம் தோற்பார் என்கிறார் இருந்தாலும் என் எதிர்ப்பை வோட்டில் பதிவுசெய்வேன். இந்தியாவில் தான் தோற்கும் கட்சிக்கு வாக்களிப்பது கேவலம் என்று நினைக்கிறோம் .


Easwar Kamal
செப் 07, 2024 18:12

இந்திய வம்சாவளியில் இருக்கின்ற மக்களில் தமிழரகள் 10% மக்களில் வெறும் 4% மக்களே ஒட்டு செலுத்த முடியும். எனக்கு தெரிந்து பாதிக்கு மேல் உள்ள தமிழர்கள் கமலா ஹாரிலிஸுக்குத்தான் ஒட்டு இதில் சில வந்தேறிகள் உள்ளனர் கமலா பிடிக்காததால் இவர்கள் 10% ஒட்டு வைத்துள்ள தெலுங்கர்களோடு சேர்ந்து உஷா தெலுங்கு என்பதால் அங்கே செல்லும் இந்த ஒட்டு. 14% ஒட்டு வைத்துள்ள குஜராத்தி பாதி மக்கள் trumph பாதி மக்கள் கமளவுக்கும் ஒட்டு செல்லும். 2020 எலெக்ஷனில் இந்திய மக்கள் biden /kamalvukuthan ஆதரவு செலுத்தினர். டிரம்ப் வந்தால் முதல் அடி இந்தியர்களுக்குத்தான் இருக்கும். தெலுங்கனுங்க தப்பிச்சுருவானுங்க உஷா தன உதவிவியை தன கணவன் மூலம் செய்வார்.


Nadanasigamany Ratnasamy
செப் 07, 2024 17:47

கமலா சீமானைப்போல் பேசுகிறார். கேட்பதற்கு மிகவும் அருவருப்பாக உள்ளது. சீனா, பாகிஸ்தான், போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு போர் நிகழுமானால் டிரம்ப் நிச்சயம் இந்தியாவை ஆதரித்து ராணுவ உதவியும் செய்வார்.


SP
செப் 07, 2024 14:28

குடியரசு கட்சி ஆட்சிவந்தால்தான் இந்தியநலனுக்கு மிகவும் நல்லது.கமலா ஹாரிஸ் பெயருக்குத்தான் இந்தியவம்சாவளி என்று நாம்தான் சொல்லிகொண்டுள்ளோம்.ஆனால் காஷ்மீர் விஷயத்தில் அவர் பாகிஸ்தான் ஆதரவு நிலைஎடுத்தவர்.


Kalaiselvan Periasamy
செப் 07, 2024 14:17

கமலா தரமற்ற நபர் . இவரால் இந்தியாவுக்கு ஒரு புண்ணியமும் இல்லை . இவர் இந்திய வம்சாவளி என்று அரசியல் ஆதாயம் தேடுபவர். அமெரிக்க வாழ் இந்தியர் இதை உணர்ந்தாள் சரி .


ramarajpd
செப் 07, 2024 13:56

யார் ஜெயித்தாலும் இந்தியாவிற்கு பிரச்சினை இல்லை. ஏற்கனவே நான்கு ஆண்டுகள் பணவீக்கம் அமெரிக்காவில் அதிகமாக உள்ளது. கமலா ஜெயித்தால் அதோகதிதான்.


Kumar Kumzi
செப் 07, 2024 12:58

கமலா ஹரிஸ் இந்திய எதிர்ப்பு கொள்கையுடையவர் இவர் வெற்றிபெற்றால் இந்தியாவில் இருக்கும் தேசத்துரோகிகளுக்கு கொண்டாட்டம்


Srinivasan K
செப் 07, 2024 13:33

Yes kamala Harris is against India and its development she took pro pakistani stand earlier and she will to destabilize india now this article is written without knowing ground realities how do you think kamala Harris and democrats are going to help india


சமீபத்திய செய்தி