உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? பாக்., விளக்கம்

மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? பாக்., விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் ஆக மீண்டும் பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்பதற்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்து உள்ளது.பிரதமர் ஆக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் இதுவரை வாழ்த்து சொல்லவில்லை.இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நிருபர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாக்ராவிடம், மோடிக்கு பாகிஸ்தான் சார்பில் வாழ்த்து சொல்லப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அவர் அளித்த பதில்: தங்களது தலைவரை தேர்வு செய்யும் உரிமை இந்திய மக்களுக்கு உள்ளது. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது. புதிய அரசு பதவியேற்காததால் இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது குறித்து பேசுவது முதிர்ச்சியற்றது.இந்தியா உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளுடன் நட்பையே பாகிஸ்தான் விரும்புகிறது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

veeramani
ஜூன் 11, 2024 10:21

இந்திய எதிரி பாகிஸ்தான் எங்களது மதிப்புமிக்க பிரதமர் பற்றிய எந்த கருத்தும் தேவையில்லை


சகுரா
ஜூன் 09, 2024 23:01

அதுக்கு இது பதில் இல்லையே!


Prabahara Lingan
ஜூன் 09, 2024 14:34

ஐயா உங்க வாழ்த்து எங்களுக்கு தேவையில்லை.உங்க கடையை மூடுங்கள்.


Ramaswamy
ஜூன் 09, 2024 10:20

யாரும் கவலை படல பாக்கிஸ்தான் மோடிஜீயை வாழ்த்தலை என்று. பாக்கிஸ்தானுக்கு சப்பாட்டுக்கு பிச்சை எடுக்கவே நேரம் சரியா இருக்கும். நம்முடைய காஷ்மீரை பிடுங்கணும். ஒரு 4 நாள் சாப்பிட பிச்சை கூட போடலாம் பதிலுக்கு.


K V Ramadoss
ஜூன் 08, 2024 21:31

ஒரு வழ வழ விளக்கம், அவர்கள் ஆட்சியை போல.


Ramesh Sargam
ஜூன் 08, 2024 20:30

பாகிஸ்தான் வாழ்த்துக்கள் மோடிக்கு தேவையே இல்லை. அவர் அதை எதிர்பார்க்கவும் இல்லை.


govindachari
ஜூன் 08, 2024 19:00

சில தேசவிரோதிகள் பாக்கிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவாக பதிவிடுவது எதிர்காலத்தில் பெரும் சவாலாகும்.இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 08, 2024 16:11

இந்திக்கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நோட்டடிக்கலாம், போதை வஸ்துக்கள் மிக தாராளமாக அனுப்பலாம். தீவிரவாதிகளை அனுப்பின்னால் இந்திய அரசு ஒன்றும் செய்யாது. மோடி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தால் இதெல்லாம் செய்ய முடியாது. கோ கையா கூட ஆகலாம்...


Veeraputhiran Balasubramoniam
ஜூன் 08, 2024 15:46

சரியான கருத்து தானே ... நம்ம ஆட்கள் எப்ப வேணும்னாலும் கவுத்துடுவாங்க


Sankar Ramu
ஜூன் 08, 2024 18:08

இதை பாக்கிஸ்தான் மாதிரி கவுரும் நாடு சொல்வது வேடிக்கையே. ?


Kumar Kumzi
ஜூன் 08, 2024 14:50

ஆமா வாழ்த்து சொல்லலாம்னு இருந்த சரிவராம போச்சே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை