உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கன் நிலநடுக்கத்தில் சிக்கிய பெண்கள் மீட்கப்படாமல் கைவிடப்படுகின்றனர் தலிபான் கட்டுப்பாடுகளால் சிக்கல்

ஆப்கன் நிலநடுக்கத்தில் சிக்கிய பெண்கள் மீட்கப்படாமல் கைவிடப்படுகின்றனர் தலிபான் கட்டுப்பாடுகளால் சிக்கல்

காபூல்:தலிபானின், 'தொடக்கூடாது' என்ற கடுமையான கட்டுப்பாடு காரணமாக ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய பெண்களை, மீட்காமல் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகிஉள்ளன. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பு 2021ல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மதத்தின் அடிப்படையில், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று, ஒரு பெண்ணின் நெருங்கிய ஆண் உறவினர், அதாவது தந்தை, சகோதரர், கணவர் அல்லது மகன் மட்டுமே பெண்ணை தொட அனுமதி உண்டு. அதேபோன்று, பெண்களும் தங்கள் குடும்பத்தைத் தவிர வெளியில் உள்ள ஆண்களை தொடவும் தடை உள்ளது-. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2,200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 3,600க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். பிற பெண்களை தொடக்கூடாது என்ற தலிபான்கள் கட்டுப்பாட்டால், இடிபாடுகளில் சிக்கிஉள்ள பெண்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மட்டுமே மீட்கப்படுவதாக கூறப்படுகிறது. மருத்துவக் கல்வி மற்றும் பொதுப்பணிகளில் பெண்கள் சேருவதை தலிபான்கள் தடை செய்துள்ளனர். இதனால், பெண் சுகாதார பணியாளர்களில் கடுமையான பற்றாக்குறை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியை மோசமாக்கியுள்ளது. பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் அரிதாகவே உள்ளனர். பெண் மீட்பு பணியாளர்கள் இல்லாத நிலையில், தலிபான்களின் பாலின கட்டுப்பாடு இன்னமும் நிலைமையை மோசமாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
செப் 07, 2025 11:55

மிகவும் கேவலமான கட்டுப்பாடு. அப்படி என்றால் ஒரு பெண்ணுக்கு ஏதாவது மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவருக்கு எந்த ஆண் மருத்துவரும் மருத்துவம் பார்க்கமுடியாதா? நிலநடுக்கத்தில் சிக்கிய பெண்களை ஆண்கள் தொடக்கூடாது. பெண்கள் மீட்கலாம் இல்லையா?


சமீபத்திய செய்தி