உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் மிகப்பெரிய சேல்ஸ்மேன் ஜெலன்ஸ்கி: உக்ரைன் அதிபரை சாடிய டிரம்ப்

உலகின் மிகப்பெரிய சேல்ஸ்மேன் ஜெலன்ஸ்கி: உக்ரைன் அதிபரை சாடிய டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பென்சில்வேனியா: '' அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்புகிறார். அவர் உலகின் மிகப்பெரிய விற்பனையாளராக திகழ்கிறார்,'' என குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது; நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை காட்டிலும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகவே ஜெலன்ஸ்கி நடந்து கொள்கிறார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டும் என அவர் விரும்புகிறார்.உலக வரலாற்றில் மிகப்பெரிய விற்பனையாளராக ஜெலன்ஸ்கி உள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் அமெரிக்கா வரும்போது 60 பில்லியன் டாலர்களை எடுத்து செல்கிறார். உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவி மூலம் ஜெலன்ஸ்கி பலனடைந்து வருகிறார். இவ்வாறு நிதியுதவியை பெற்று வருவதால் தான் அவர் ஜனநாயக கட்சியினரை விரும்புகிறார். ஆனால், நான் வேறு மாதிரி செயல்படுவேன். அமைதியை ஏற்படுத்துவேன். இவ்வாறு டிரம்ப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mani . V
செப் 25, 2024 05:52

சரி, நீ ஒழுங்கா வரி கட்டினாயா? வரி ஏய்ப்பு செய்த ஆளுதானே நீ?


Kasimani Baskaran
செப் 25, 2024 05:48

நேட்டோ விரிவாக்கம்தான் அடிப்படை பிரச்சினை. அதை தவிர்த்து இருந்தாலே கூட இந்த போர் வந்திருக்காது.


Easwar Kamal
செப் 24, 2024 23:16

எப்படி அமைதி திரும்ப போகுது. ஆப்கான் நாட்டை தூங்கி கொண்டு இருந்த தீயவராவதி நாட்டை கொடுத்துவிட்டு அமெரிக் படையை வாபஸ் பெற வைத்த மாதிரியா. நீங்கல் என்ன செய்வீர்கள் உங்கள் putinindam உக்ரானை சரண் அடைய சொல்வீர்கள். அதுதான் ரஷ்யாவுக்கு வேண்டும். trumpan இடம் யாரும் நிரந்தர நண்பர்களாக இருக்க முடியாது. நம் மோடி சேர்த்துதான்.


கிஜன்
செப் 24, 2024 23:12

எங்க ஊர்ல சொல்லுவாங்க, "உள்ளத சொன்னவன் ஊருக்கெல்லாம் பகை ன்னு"


தாமரை மலர்கிறது
செப் 24, 2024 22:50

சரியாக ட்ரம்ப் சொல்லியுள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை