உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவில் ஜாகிர் நாயக் ‛எக்ஸ் கணக்கு முடக்கம்

இந்தியாவில் ஜாகிர் நாயக் ‛எக்ஸ் கணக்கு முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஜாகிர் நாயக்கின் ‛எக்ஸ்' கணக்கை மத்திய அரசு முடக்கியது.மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் நாயக், இவர் மீது பணமோசடி, வெறுப்பு பிரசாரம், பயங்கரவாதத்தை துாண்டியது என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.2016ல், நாட்டை விட்டு வெளியேறி மலேஷியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜாகிர் நாயக் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜாகிர் நாயக்கை தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, நேற்று ஜாகிர் நாயக்கின் 'எக்ஸ்' கணக்கை முடக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

shhafi
அக் 07, 2024 12:09

இவர் செய்த குற்றம் என்ன ,நிரூபிக்கப்பட்டதா என்று சொன்னால் நல்லாருக்கும். பொய் வழக்கு .


venugopal s
அக் 05, 2024 16:47

ஆளை முடக்குவதை விட்டு விட்டு கணக்கை முடக்கி என்ன பிரயோஜனம்?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 05, 2024 10:10

அமித் ஷா ஜி ..... அவரோட அடிப்பொடிஸ் கோடிக்கணக்கில் இந்தியாவுல சாரி உங்க பாரதத்துல பத்திரமா இருக்காங்க சார் ஜி ....


naranam
அக் 05, 2024 03:38

இதற்கு இவ்வளவு தாமதம் ஏன்? இந்தத் தீவிரவாதியை இன்னும் விட்டு வைக்கவேண்டும்?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 05, 2024 10:08

விட்டு வைக்கிறதா ?? மலேசியா போயி, அங்கிருந்து பாதுகாப்பா பாக் போயிட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை