உள்ளூர் செய்திகள்

நொய்டா முருகன் கோவிலில் பக்தர்களின் மத்தியில் தேச பக்தி

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, நொய்டாவில் உள்ள செக்டார் 62ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் கோவில் வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து தேசிய கீதம் அனைவரும் பாடினர். நொய்டா முருகன் கோவிலில் பக்தர்களின் மத்தியில் 'தேச பக்தியும் ' காணப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேதிக் பிரச்சார் சன்ஸ்தானத்துடன் தொடர்புடைய மூத்த உறுப்பினர்களில் ஒருவரான வி வேதமூர்த்தி கொடியேற்றினார், அவர் தனது முப்பத்தேழு ஆண்டுகால நீண்டகால உறவில் கண்ட கடினமான மற்றும் நல்ல காலங்களைப் பற்றி குறிப்பிட்டார். மேலும், செக்டார் 62ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேய கோவிலுக்கும், செக்டார் 22ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலுக்கும் வரவிருக்கும் 2வது ஆண்டு விழாவும் சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ஸ்ரீதர் ஐயர் மற்றும் பராமரிப்பு குழுவினருக்கு, மிகக் குறுகிய அறிவிப்பில் முக்கியமான நிகழ்வு, ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு, கோவில் நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது. இந்நிகழ்ச்சியில் ரவி சர்மா, பாலாஜி, ராமசேஷன், ஜானகி, வெங்கடராமன், ராஜேந்திரன், ராஜு ஐயர், கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட சிறு குழந்தைகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !