மேலும் செய்திகள்
விருதுகளை அள்ளும் மல்யுத்த வீரர் அலி ஷேர்
20 minutes ago
தடகள இளம்புயல் பூர்வி ஹரிகந்த்ரா
13-Aug-2026
கேம் ஆன் 1. 2. . 3...
30-Jul-2026
போல்வால்ட்டில் சாதிக்கும் சிந்துஸ்ரீ
23-Jul-2026
அருமை நாயகத்திற்கு 'அர்ஜுனா' விருது கர்நாடக கால்பந்து சங்கம் கவுரவிப்பு - நமது நிருபர் -: கால்பந்து போட்டியில் 1962ல், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அருமைநாயகத்திற்கு 'அர்ஜுனா விருது' அறிவிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடக மாநில கால்பந்து சங்கத்தினர், அவரை கவுரவித்தனர். மத்திய அரசு சமீபத்தில் விளையாட்டு வீரர்களுக்கு, 2025ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை அறிவித்தது. அதில், பெங்களூரில் வசித்து வரும் இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் அருமை நாயகத்திற்கு, கால்பந்து விளையாட்டில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்ததற்காக, அவருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்தது. இப்போது, 84 வயதாகிறது அவருக்கு. * தமிழர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் இசையா. 1945ல் பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல்., நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது, 'கன் ட்ரூப்' என்று அழைக்கப்படும், தற்போதைய கவுதம்பூரில் குடியேறினார். இவரின் குடும்பத்தில் விளையாட்டு வீரர்கள் யாரும் இல்லை. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான சிறுவர்கள் கால்பந்து விளையாடுவர். இதனால் ஈர்க்கப்பட்ட இசையாவின் மகன் அருமை நாயகம், ஆஸ்டின் டவுனில் உள்ள உயர்நிலைப்பள்ளி அணியின் முக்கிய வீரராக இருந்தார். கடந்த, 1958 முதல், உள்ளூர் அணிகளுக்காக அவர் காட்டிய திறமை, பின்னி மில்ஸ் நிறுவனத்தில் அவருக்கு அழைப்பும், வேலையும் பெற்றுத்தந்தது. அருமைநாயகம் வசிக்கும் பகுதியில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் பின்னி மில் அமைந்திருந்தது. தினமும் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார். ஓய்வுநேரத்தில் கால்பந்தும் விளையாடி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், எச்.ஏ.எல்., நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கோழிக்கோடில் நடந்த சந்தோஷ் கோப்பை தொடரில், கர்நாடகா அணிக்காக விளையாடினார். கொல்கட்டா அணி எச்.ஏ.எல்., அணிக்காக விளையாடி கொண்டிருந்தபோது, கொல்கட்டாவில் உள்ள மோகன் பகான் கிளப்பில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து அருமை நாயகம் கூறியதாவது: கொல்கட்டாவின் மோகன் பகான் கிளப்பிற்காக விளையாடிய கெம்பையா, ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தார். 'என்னுடன் புறப்பட்டு வா' என்றார். நானும் அவருடன் புறப்பட்டு மும்பை சென்றேன். என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு, மோகன் பகான் அணியினரும் தங்கியிருந்தனர். அவர்களுக்கு, கால்பந்து உபகரணங்கள் வழங்கப்பட்டன. அங்கிருந்து அந்த அணியுடன், கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்தோம். எங்கள் அணி, 25 போட்டிகளில் விளையாடியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினேன். அங்கிருந்து நாடு திரும்பியதும், மோகன் பகான் அணியின் நிரந்தர வீரரானேன். ஆண்டுதோறும் எனக்கு மதிப்பூதியமாக 3,000 ரூபாய், உணவு, தங்குமிடம் வழங்கினர். ஆண்டுக்கு ஆறேழு மாதங்கள் கொல்கட்டாவில் தங்குவேன். என்னுடைய கடின உழைப்ப, 1962ல் பலனளித்தது. இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்து. சுனி கோஸ்வாமி, பி.கே.பானர்ஜி, முகமது யூசுப் கான் போன்ற ஜாம்பவான்களுடன் விளையாடி உள்ளேன். என் தலைமையில் இந்திய அணி, 1966ல் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், இரண்டாம் இடம் பிடித்தது. அதே ஆண்டில், பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் விளையாடினோம். அத்துடன், என் தலைமையில், 1962 - 63, 1964, 1966 ஆகிய மூன்று முறை தொடர்ந்து 'டூராண்ட்3 கோப்பையை வென்றோம். இவ்வாறு அவர் கூறினார். 'பேபி டாக்சி' கொல்கட்டாவின் மோகன் பகான் அணிக்காக விளையாடியபோது, அருமைநாயகத்தின் வேகத்தை பார்த்த வங்க வீரர்கள், அவரை, பேபி டாக்சி என்று அழைத்தனர். 1960களில் கொல்கட்டா முழுதும் டாக்சிகள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தன. அவற்றின் ஓட்டுநர்கள், அந்த பெருநகரின் குறுகலான, நெரிசலான சாலைகளில் தங்கள் திறமைகளை வெளிகாட்டி கொள்வர். அதுபோன்று அருமைநாயகமும் பந்தை பெற்று, எதிரணி வீரர்களை ஏமாற்றி, பந்தை ஸ்டிரைக்கருக்கு பாஸ் செய்ததால், அவரை 'பேபி டாக்சி' என்று அழைத்தனர்.
20 minutes ago
13-Aug-2026
30-Jul-2026
23-Jul-2026