உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  கர்நாடக ஒலிம்பிக் போட்டியில் அசத்திய வீரர் - வீராங்கனையர்

 கர்நாடக ஒலிம்பிக் போட்டியில் அசத்திய வீரர் - வீராங்கனையர்

- நமது நிருபர் - துமகூரில் நடந்து முடிந்த கர்நாடக ஒலிம்பிக் போட்டியில், வீரர், வீராங்கனைகள் அசத்தினர். கர்நாடகா ஒலிம்பிக் சங்கம் சார்பில் துமகூ ரில் கடந்த 16ம் தேதி, 'கர்நாடகா ஒலிம்பிக்' போட்டி துவங்கியது. பல்வேறு பிரிவுகளில் வீரர், வீராங்கனையர், தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். துமகூரு ஜூனியர் கல்லுாரி மைதானத்தில் நடந்த இறுதி போட்டி முடிவுகள்: ஆண்கள் கபடி அணியில், துமகூரு அணி, ஷிவமொக்கா அணியை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றது. பெங்களூரு தெற்கு மாவட்ட அணி வெண்கல பதக்கம் பெற்றது. ஜூடோவில் 100 கிலோ பிரிவில், பெங்களூரு நகரின் ரவிசந்திரா, விஜயபுராவின் சந்தீப் லமானி, பெலகா வியின் ஓம்கார் மினாட் சே ஆகியோர் முறையே மூன்று இடங்கள் பிடித்தனர். பளு துாக்குதல் 60 கிலோ பிரிவில், தட்சிண கன்னடாவில் பிரசாந்த் சிங், தட்சிண கன்னடாவின் கவன், தாவணகெரேயின் கரண் ஆகியோர் மு தல் மூன்று இடங்கள் பிடித்தனர். மேலும், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பெங்களூரு நகரின் கல்யாண், பெலகாவியின் வைபவ் மாருதி பாட்டீல், பெங்களூரு நகரின் கமலக்கண்ணன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 400 மீட்டர் பிரிவில், பெலகாவியின் ஓம் சுனில் சவுகான், பெலகாவியின் வீரேஷ், பெலகாவியின் ஸ்வேவல் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், பெங்களூரு நகரின் ரோஹித் சங்கர் - ராம்குமார்; மங்களூரின் சன்மன் - வினய்குமார் ஜோடியை, 3க்கு 0 செட் கணக்கில் வீழ்த்தினர். கைப்பந்து போட்டியில், மாநில போலீஸ் அணி, எஸ்.டி.எம்., உஜிரே அணியை, வீழ்த்தியது. கூடைப்பந்து போட்டியில், யங்க் ஓரியன்ஸ், பாங்க் ஆப் பரோடா, டைஸ் பெங்களூரு ஆகிய அணிகள் முறையே மூன்று இடங்களை பிடித்தன. 50 - 55 கிலோ குத்துச்சண்டை போட்டியில், உத்தர கன்னடாவின் மவுரேஷ் சிதோய், பெலகாவியின் பிரதமேஷ் கர்டே, பெங்களூரு நகரின் மயூர் - மைசூரின் மனோச்சார் நாயக் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பெண்கள் அணி: பெண்கள் கபடி பிரிவில், தட்சிண கன்னடா அணி, துமகூரு அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. சிக்கமகளூரு அணி வெண்கலம் பெற்றது. ஜூடோவில் 40 கிலோ பிரிவில் பெலகாவியின் ரம்யா; தாவணகெரேயின் சைத்ரா, விஜயநகரின் சாதியா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். பளு துாக்குதலில், 48 கிலோ பிரிவில், தட்சிண கன்னடாவின் ஷ்ரவ்யா, தட்சிண கன்னடாவின் ஹர்ஷிதா, பெங்களூரு நகரின் கீர்த்திகா காசி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். துமகூரு ந கரின் அமோனிகெரேயில் 500 மீட்டர் 'டிராகன் படகு' போட்டி நடந்தது. இதில், பெங்களூரு நகர அணி, தங்கப்பதக்கம் வென்றது. பெங்களூரு கிராமம் வெள்ளியும், சித்ரதுர்கா அணி வெண்கல பதக்கமும் வென்றது. டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் மங்களூரின் பிரேக் ஷா - நஹலா; பெங்களூரு நகரின் சஹானா - கர்ணா ஜோடியை, 3க்கு 2 செட் கணக்கில் வீழ்த்தினர். கைப்பந்து போட்டியில், பெங்களூரு போஸ்டல் அணி, ஜே.எஸ்.எஸ்., தார்வாட் அணியை வீழ்த்தியது. கூடைப்பந்து போட்டியில், மைசூரு, டைஸ் வித்யாநகர், மாண்டியா அணிகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன. குத்துச்சண்டை 40 - 48 கிலோ பிரிவில், மைசூரின் ஸ்பூர்த்தி, பெங்களூரு நகரின் திவ்யா, துமகூரின் பர்ஹீன் - விஜயநகரின் கரிஸ்மாவ் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஜிம்னாஸ்டிக் பிரிவில், பெங்களூரு நகரின் ரியா பஃபானா, ரிதம் ஜிம்னாஸ்டிக்கில் 5 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். மான்யா ரெட்டி, நான்கு வெள்ளி பதக்கங்களை வென்றனர். இதுபோன்று பல போட்டிகளில் வீரர், வீராங்கனையர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நிறைவு நாளான நேற்று பல பதக்கங்களுடன் மகிழ்ச்சியுடன் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை