மேலும் செய்திகள்
சுவையான 'ராகி கில்ஸ்'
15-Mar-2025
லட்டு என்றாலே நாவில் எச்சில் ஊறும். பூந்தி லட்டு, பாசிப்பருப்பு லட்டு, ரவை லட்டு, முந்திரி லட்டு என, பலவிதமான லட்டுகள் உள்ளன. அதேபோன்று பேசன் லட்டுவும் மிகவும் சுவையானது. இதை செய்வதும் எளிது. தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 கப் சர்க்கரை - ஒன்றரை கப் ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன் நெய் - 1 கப் செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, நான்கு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், கடலை மாவை சிறிது, சிறிதாக போட்டு பச்சை வாசனை போகும் வரை, கை விடாமல் கிளறவும். மிதமான தீயில் இருக்க வேண்டும்.அரை மணி நேரம் கிளறியதும், ஒரு ஸ்பூன் நெய் போடவும். கடலை மாவு, நெய் கலவை கெட்டியாக வரும்போது, சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறவும். அதன்பின் தட்டில் கொட்டவும். அதன் மீது அரை கப் பொடித்த சர்க்கரையை போட்டு, ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.அதன்பின் உங்களுக்கு எவ்வளவு இனிப்பு வேண்டுமோ, அவ்வளவு சர்க்கரை பொடி, ஏலக்காய் துாள் சேர்த்து கையால் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இதனை சிறு, சிறு உருண்டை பிடியுங்கள். அதன் நடுவில் கட்டை விரலால் அழுத்தி, பொடித்த முந்திரி, பிஸ்தாவை துாவுங்கள். சுவையான 'பேசன் லட்டு' தயார். - நமது நிருபர் -
15-Mar-2025