உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  கேப்பை மாவில் 5 நிமிடத்தில் சாக்லேட் கேக்

 கேப்பை மாவில் 5 நிமிடத்தில் சாக்லேட் கேக்

: நம் வீடுகளில் ராகி எனும் கேப்பை மாவு, தயிர், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, பாதாம், முந்திரி என ஏதாவது நட்ஸ் வகைகளில் ஒன்று நிச்சயம் இருக்கும். இதனை வைத்தே, சத்தான கேப்பை மாவில் சாக்லேட் கேக் செய்யலாம். இதற்கு ஐந்து நிமிடங்களே போதும். தேவையான பொருட்கள் l கேப்பை மாவு ( ராகி ) --- 2 கப் l வெல்லம் -- சுவைக்கு ஏற்ப l கோ கோ பவுடர் -- 2 டீஸ்பூன் l தயிர் -- சிறிதளவு l பேக்கிங் பவுடர் -- சிறிதளவு l எண்ணெய் -- சிறிதளவு செய்முறை l ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவு, கோ கோ பவுடர், பேக்கிங் பவுடர் போன்றவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். l இதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, நன்கு கலந்து விட்ட பின், சிறிதளவு எண்ணெய் விட்டு கிளறுங்கள். l கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வந்ததும், பேக் செய்யும் பாத்திரம் அல்லது சிறிய பவுலில் மாற்றி மைக்ரோ ஓவனில், 2 நிமிடங்களுக்கு வைத்து எடுங்கள். l ஒருவேளை மைக்ரோ ஓவன் இல்லையென்றால் குக்கரில் கேக் செய்வது போன்று செய்துவிடவும். l இறுதியாக அதற்கு மேல், மெல்டட் டார்க் சாக்லேட் எனும் டார்க் சாக்லேட் சிரப் ஊற்ற வேண்டும். சுவைக்காக பாதாம், முந்திரியை உடைத்து, அதன் மேல் துாவினால் ஆரோக்கியம் நிறைந்த சத்தான கேப்பை சாக்லேட் கேக் தயார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை